ஏலம் முடிஞ்சதும்.. 'கோலி' அனுப்பிய 'மெசேஜ்'.. சீக்ரெட் பகிர்ந்த 'டு பிளஸ்ஸிஸ்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில். பெங்களூரில் வைத்து ஐபிஎல் ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
அனைத்து ஐபிஎல் அணிகளும், ஐபிஎல் ஏலத்தின் முடிவில், சிறந்த வீரர்களைத் தேர்ந்து எடுத்துள்ளது. வரவிருக்கும் ஐபிஎல் தொடரில், அணி வீரர்களை ஒன்றிணைத்து கோப்பையைக் கைப்பற்றுவதற்கான பணிகளிலும், ஐபிஎல் அணிகள் விரைவில் ஈடுபடும் என தெரிகிறது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்த முடிவுகள், ரசிகர்கள் மத்தியில் அதிகம் கேள்வியினை ஏழுப்பியிருந்தது.
சிஎஸ்கே அணி
முதல் நாள் ஏலத்தின் போது, சிஎஸ்கே அணி மொத்தம் ஆறு வீரர்களை ஏலத்தில் எடுத்திருந்தது. இதில், பிராவோ, அம்பத்தி ராயுடு, தீபக் சாஹர், உத்தப்பா மற்றும் ஆசிப் ஆகிய 5 வீரர்கள், கடந்த ஆண்டும் சிஎஸ்கே அணிக்காக ஆடிய வீரர்கள் தான். இவர்களை எல்லாம் ஏலத்தில் போட்டி போட்டு எடுத்த சிஎஸ்கே, அந்த அணியின் நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் டுபிளஸ்ஸிஸ் ஆகியோரை ஏலத்தில் எடுக்க முயலவில்லை.
உருக்கமான வீடியோ
இதில், சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே உள்ளிட்ட எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை. ரெய்னாவை ஏன் எடுக்கவில்லை என்பதற்கு விளக்கத்தையும் சிஎஸ்கே அணி அளித்திருந்தது. இன்னொரு பக்கம், தொடக்க வீரர் டு பிளஸ்ஸிஸை, பெங்களூர் அணி, 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. தொடர்ந்து, சென்னை அணியில் இருந்து பிரிந்த டு பிளஸ்ஸிஸ், அது பற்றி உருக்கமான வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
பெங்களூர் அணியில் டு பிளஸ்ஸிஸ்
பெங்களூர் அணியின் கேப்டனாக கடந்த சீசனில், விராட் கோலி செயல்பட்டு வந்தார். ஆனால், தொடர் முடிந்ததும் அந்த பதவியில் இருந்து, தான் விலகிக் கொள்வதாக கோலி அறிவித்திருந்தார். தொடர்ந்து, இந்த ஏலத்தின் மூலம் தான், பெங்களூர் அணியின் கேப்டன் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. தற்போது, டு பிளஸ்ஸிஸ் அணிக்கு வந்துள்ளதால், அவர் கேப்டன் பதவிக்கு பொருத்தமாக இருப்பார் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.
டு பிளஸ்ஸிஸ் - கோலி
இந்நிலையில், பெங்களூர் அணியில் இணைந்துள்ளது பற்றிப் பேசிய டு பிளஸ்ஸிஸ், 'பெங்களூர் அணியில் இணைந்த பிறகு, விராட் கோலி என்னை அணியில் வரவேற்று, ஒரு மெசேஜ் அனுப்பினார். அது மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்தது. எனக்கும், கோலிக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே, நல்லுறவு உள்ளது. சர்வதேச போட்டிகளில், இருவரும் எதிர் எதிர் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளோம். நாங்கள் இருவரும், அதிக போட்டித் தன்மை கொண்டவர்கள்.
காத்துக் கொண்டிருக்கிறேன்
எனவே, ஐபிஎல் போட்டியில் அவரை எதிர்த்து போட்டியிடாமல் இருப்பது நல்லது தான். ஏனென்றால், நான் அவுட்டாகும் போது, எதிரணியில் விராட் இருந்தால், சந்தோஷத்தில் என் காதருகில் கத்திக் கொண்டே ஓடுவார். அதனை நான் வெறுப்பேன். இனி ஒரே அணியில் ஆடினால், அதனை கேட்க வேண்டிய தேவை இருக்காது.
உலகின் தலைச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலியுடன், இணைந்து ஆடுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அதனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்' என கோலியுடன் இணைந்து ஆடவுள்ளது பற்றி, மிகவும் ஆவலுடன் டு பிளஸ்ஸிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டு பிளஸ்ஸிஸ் இடத்துக்கு கச்சிதமா ஒருத்தர 'சிஎஸ்கே' புடிச்சுட்டாங்க.. "இவரு அப்பவே டபுள் செஞ்சுரி அடிச்சவர் ஆச்சே.."
- "CSK-ல இருந்து கிளம்புறேன்.." ஏலத்திற்கு பிறகு டு பிளஸ்ஸிஸ் வெளியிட்ட 'வீடியோ'.. மனம் உடைந்த ரசிகர்கள்
- சிஎஸ்கே ப்ளேயர்ஸா பார்த்து ‘குறி’ வைக்கும் ஆர்சிபி.. முதல்ல டு பிளசிஸ்.. இப்போ இவரையும் தூக்கிட்டாங்களே..!
- 'சிஎஸ்கே'வில் இருந்து 'ஆர்சிபி'க்கு போன டு பிளஸ்ஸிஸ்.. "அதே நாள்'லயா இப்டி ஒரு விஷயம் நடக்கணும்.." மீண்டும் மனம் உடைந்த சிஎஸ்கே ரசிகர்கள்
- தமிழக வீரரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற போராடிய சிஎஸ்கே.. ஆனா கடைசி வர ‘டஃப்’ கொடுத்து அந்த டீம் தட்டிட்டு போயிடுச்சு..!
- ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க..! அந்த வீரரை எடுக்க நீண்ட நேரம் போட்டி போட்ட இரு அணிகள்.. யாருப்பா அவரு..?
- ஐபிஎல் மெகா ஏலம் : சிஎஸ்கே அணி எடுத்த முடிவு.. கடும் வேதனையில் சென்னை ரசிகர்கள்.. ஏலத்தில் நடந்தது என்ன?
- IPL AUCTION: கோலாகலமாக தொடங்கி சூடு பிடித்த ஐபிஎல் ஏலம்! 10 அணிகளும் மும்முரம்... முழு தகவல்
- இரண்டே 'மேட்ச்' மூலம்.. ஒட்டு மொத்தமா திரும்பி பார்க்க வைத்த வீரர்.. "ஐபிஎல் ஏலம் களை கட்டப் போகுது"
- கோலி பார்ம்க்கு வர இதான் ஒரே வழி.. சுனில் கவாஸ்கர் சொன்ன ஐடியா..! ஆனால் அதுக்கு சச்சின் மனசு வைக்கனுமே