‘என்னங்க இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு..! கொஞ்சம் டைம் குடுங்க!’- இந்திய ரசிகர்களுக்கு முன்னாள் வீரரின் கோரிக்கை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி இன்று முதல் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடத் தொடங்கியுள்ளது. முதல் முறையாக புதிய பயிற்சியாளர் டிராவிட் தலைமையிலான அணி இன்று ஜெய்பூரில் முதல் போட்டியைச் சந்தித்து வருகிறது.

Advertising
>
Advertising

துபாயில் நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் மோசமான தோல்வியைச் சந்தித்தது இந்திய அணி. இந்தப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் டி20 கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு இந்த டி20 தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. டிராவிட் பயிற்சியின் கீழ் இளம் வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து அணி நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இதனால், 3 வாரங்களுக்கு முன்னர் இதே டி20 ஆட்ட முறையில் நியூசிலாந்து அணியிடம் தோற்ற இந்திய அணி மிகுந்த நம்பிக்கை உடன் களம் இறங்க வேண்டிய தேவை உள்ளது. இந்திய அணிக்கு புது கேப்டன், கோச், பல இளம் வீரர்கள் என புது படையே விளையாட உள்ளதால் அணியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்த சூழலில் டிராவிட் மீது மிகுந்த அழுத்தத்தை வைக்காமல் அவர் உட்பட இந்திய அணிக்கு கால அவகாசம் தரும்மாறு இந்திய அணி ரசிகர்களிடம் முன்னாள் இந்திய வீரரான ராபின் உத்தப்பா கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து ராபின் உத்தப்பா கூறுகையில், “ராகுல் டிராவிட் போன்ற ஒருவர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆக பொறுப்பு ஏற்கும் போது இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிப்பது நியாயம் தான்.

ஆனால், ராகுல் டிராவிட் உட்பட அணியினருக்கு இந்திய ஆதரவாளர்களாக நாம் கால அவகாசம் தர வேண்டும். அவர்கள் தங்களது இடங்களில் நிதானிக்க இந்த அவகாசம் அவர்களுக்கு உதவும். டிராவிட் தனக்கான இடத்தை அணியில் நிலைநிறுத்த குறிப்பிட்ட காலம் எடுக்கும். அதற்கு முன்னதாகவே எல்லாம் நடந்துவிட வேண்டும் என்றும் உடனடியாக ராகுலிடம் இருந்து வெற்றிகள் வந்து குவிய வேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்கக்கூடாது.
நம்மிடம் மிகச்சிறந்த அணி இருக்கிறது. அதனால், வெற்றி முடிவுகள் நம்மை நோக்கி வரும். ஆனால், இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் ராகுல் டிராவிட் அணியை இன்னும் மெருகேற்றி இருப்பார். ஒரு பயிற்சியாளராக இந்திய அணியை தலைமை தாங்குவது ராகுலுக்கு இது முதல் முறை இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

CRICKET, RAHUL DRAVID, T20I, TEAM INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்