‘தோனி’கிட்ட இருந்து தொடங்குன ‘மாற்றம்’… இன்னைக்கும் நிக்குதுன்னா..!- புகழ்ந்து தள்ளும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவின் டி20 கேப்டன் ஆக ரோகித் சர்மா புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டு உள்ளார். மேலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக ராகுல் டிராவிட் பதவி ஏற்று இருக்கிறார். அணியில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதை அடுத்து டிராவிட் மற்றும் ரோகித் சர்மா இணைந்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

Advertising
>
Advertising

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பெரிதாக பேசப்பட்ட ஒரே விஷயம் அணியின் வேலைப்பளுவைக் குறைப்பது குறித்துதான். டிராவிட் மற்றும் ரோகித் இருவரும் இணைந்து ‘வேலைப்பளு மேலாண்மை’ குறித்து அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசினார்கள். இதை பல நாடுகளைச் சேர்ந்த இந்நாள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இந்த வரிசையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆன சல்மான் பட், இந்திய அணியின் இந்த அறிவிப்பை மிகவும் பாராட்டி உள்ளார்.

இந்திய அணியினரின் நெருக்கடியான அட்டவணையை எளிதாக்கும் வகையில் ரோகித், டிராவிட் பல முயற்சிகளை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ரோகித் கூறுகையில், “வேலைப்பளு மேலாண்மை என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடி வருகிறோம். இந்த சூழலில் எங்கள் உடல்நிலையைப் பார்த்துக் கொள்வதும் முக்கியம் தான். நம்முடைய வீரர்கள் ஒன்றும் மெஷின்கள் கிடையாது. தினமும் ஸ்டேடியத்துக்கு வந்து போவதுமாக எங்களால் இருக்க முடியாது.

எங்களுக்கும் ஓய்வு தேவைப்படும், புத்துணர்வுக்கான தேவை இருக்கிறது. டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு என்று பிரித்து வீரர்களுக்கு ஓய்வு அறிவித்து இருக்கிறோம். ஒவ்வொரு சவாலுக்கும் எங்கள் வீரர்களை மனதளவில் தயார் ஆக வைத்திருக்க வேண்டும் என விரும்புகிறோம். ஒவ்வொரு சீரிஸ்-க்கும் இதை மனதில் வைத்தே செயல்படுவோம்” என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கூறுகையில், “இந்திய அணியில் வேலைப்பளு மேலாண்மை குறித்து பேசி இருப்பது மிகச்சிறந்த விஷயம்தான். இதுதான் ரோகித் மற்றும் கோலியிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயமே. தோனியின் தலைமை இந்திய அணியில் தொடங்கியதில் இருந்தே இந்திய அணியில் நல்ல மாற்றங்கள். தோனி ஆரம்பித்து வைத்த நல்ல விஷயங்களை கோலியைத் தொடர்ந்து ரோகித்தும் பின்பற்றத் தொடங்கி உள்ளார். இவர்கள் அனைவரும் எதுவென்றாலும் நேராகப் பேசுவார்கள். கேள்விக்கு என்ன பதில் வேண்டுமோ அதை சரியாகச் சொல்வார்கள்.

ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ஏன் ஒவ்வொரு மனிதனுக்குமே ஓய்வு என்பது மிகவும் முக்கியம். ஓய்வு என்பது ஒவ்வொருவரின் விளையாட்டையும் அவர்களது எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும். ஒவ்வொரு முறையும் சிறப்பாக விளையாட முடியாவிட்டாலும் விளையாட்டு சீராக இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு வீரர் 10 ஆண்டுகளாக விளையாடுகிறார் என்றால் அதில் 7-8 ஆண்டுகள் மிகவும் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி இருந்தால் 1-2 ஆண்டுகள் கொஞ்சம் தொய்வாக இருக்கத்தான் செய்யும். சின்ன இடைவெளி இருந்தால் நிச்சயம் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம்.

CRICKET, ROHIT SHARMA, RAHUL DRAVID, TEAM INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்