கோலி இடத்துக்கு அடுத்து வரப்போறது யாரு..? RCB போடும் கணக்கு என்ன..?- முன்னாள் வீரரின் ‘ஒபினியன்’..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்காக விரைவில் ஏலம் எடுக்கும் நிகழ்வு தொடங்க உள்ளது. இந்த சூழலில் ஆர்சிபி அணிக்கான ஏலங்கள் எப்படி அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertising
>
Advertising

ஆர்சிபி அணிக்காக இனிமேல் கேப்டன் ஆக விளையாடப் போவது இல்லை என விராட் கோலி ஏற்கெனவே அறிவித்துவிட்டார். இந்த சூழலில் அணியில் தக்கவைக்கப்பட்டு இருக்கும் நால்வரில் யாரை கேப்டன் ஆக நியமிப்பார்கள் என்ற கேள்விக்கு தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய அணி வீரர் ஆன இர்ஃபான் பதான்.

இதுகுறித்து இர்ஃபான் பதான் கூறுகையில், “2022-ம் ஆண்டு நடக்க உள்ள 15-வது ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியின் சார்பாக தக்கவைக்கப்பட உள்ள நால்வரில் இருந்து அந்த அணி நிச்சயமாகத் தனது கேப்டனைத் தேர்ந்தெடுக்காது. என் மனதில் தக்கவைக்கப்பட உள்ள நால்வர் யாராக இருப்பார்கள் என்பது குறித்து ஓரளவு ஒரு யோசனை உள்ளது.

கண்டிப்பாக அணியில் விராட் கோலி இருப்பார். ஆனால், அவர் வரும் போட்டிகளில் இருந்து கேப்டன் ஆக இருக்கப்போவது இல்லை என ஏற்கெனவே அறிவித்து இருந்தார். அடுத்ததாக க்ளென் மேக்ஸ்வெல் தக்கவைக்கப்படுவார். ஆனால், அவரிடம் கேப்டன் என்ற பொறுப்பைக் கொடுத்தால் சரிவராது. அவர் சுதந்திரமாக விளையாட விரும்புபவர். அவரை அப்படியே விளையாட விட்டுவிட வேண்டும். மாறாக பொறுப்பு கொடுப்பது சரிவராது.

மூன்றாவதாக சாஹல் இருக்கிறார். நல்ல பந்துவீச்சாளர் என்பதால் அவரது தேவை அணிக்கு நிச்சயம் உண்டு. அவரைப் போல் ஒருவரை ஆர்சிபி அணி நிச்சயமாக விட்டுக்கொடுக்கவே கூடாது. 4-வது ஆக யார் தக்கவைக்கப்படுவர் என்பது குறித்து பெரிய விவாதமே நடந்து வருகிறது. சிராஜ் ஆக இருப்பார் என நான் நினைக்கிறேன். இதனால் இந்த நால்வரில் யாரும் கேப்டன் ஆக இருக்கப் போவது இல்லை. புதிதாக ஏலத்தில் தான் கேப்டனைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்” எனப் பேசியுள்ளார்.

CRICKET, IPL 2022, RCB, VIRAT KOHLI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்