'அப்போவே 3 கோடி ரூபா???'... 'இவருக்கு இவ்ளோவான்னு'... 'அத்தன கேள்வி கேட்டாங்க, ஆனா இன்னிக்கு'... 'பெருமையோட பகிர்ந்த பிரபல வீரர்!!!...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தமிழக வீரர் நடராஜனை முதல்முதலாக கிங்ஸ் லெவன் அணிக்காக எடுத்தபோது பலர் அந்த தேர்வு குறித்து கேள்வி எழுப்பியதாக முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். 

தமிழக வீரர் நடராஜன் ஐபிஎல்லில் கலக்கியதோடு தற்போது விளையாடிய முதல் ஒருநாள் போட்டியிலேயே அசத்தி சர்வதேச கிரிக்கெட் அரங்கிலும் பாராட்டுகளை குவித்து வருகிறார். இந்தாண்டு ஐபிஎல்லில் தன் துல்லியமான யார்க்கர் மூலம் நடராஜன் போட்டியின் முக்கியமான நேரங்களில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். இந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய அவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதையடுத்து ஐபிஎல்லில் அனைவருடைய கவனத்தையும் ஈரத்த நடராஜன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பெற்றதுடன், கடைசி ஒரு நாள் போட்டியில் ஆடும் லெவனில் இடம்பிடித்து 10 ஓவர்கள் வீசி 70 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறார். இந்நிலையில் தற்போது நடராஜனை முதல்முதலாக 2017 ஐபிஎல்லில் ரூ 3 கோடி கொடுத்து பஞ்சாப் அணிக்காக எடுத்த சேவாக் அதுகுறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சேவாக், "2017 ஐபிஎல்லில் அவரை நான் முதலில் எடுத்தபோது நிறைய பேர் இவருக்கு ஏன் இவ்வளவு தொகை கொடுத்து எடுத்தீர்கள் எனக் கேள்வி கேட்டார்கள். அந்த சீசனில் பஞ்சாப் அணியில் நிறைய தமிழ்நாட்டு வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் நடராஜனை பற்றிக் கூறியதுடன், அவருடைய துல்லியமான யார்க்கர்கள் பற்றியும், அவர் டெத் ஓவர்களில் அருமையாக வீசக்கூடிய பவுலர் எனவும் கூறினார்கள்.

அதன்பிறகு அவருடைய பவுலிங் வீடியோக்களை பார்த்து, அவருடைய திறமையை அறிந்துகொண்ட பின்னர் தான் அவரை அணியில் எடுத்தேன். ஆனால் உள்ளூர் போட்டிகளில் கூட விளையாடாத அவரை வெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கை வைத்து மட்டும் எப்படி எடுத்தீர்கள் எனப் பலரும் கேள்வி கேட்டார்கள். அதனால் முன்னதாக அவருக்கு டி 20 போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படுமென நான் நினைத்துக் கொண்டிருந்தபோது  அவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கிடைத்து விளையாடியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் இங்கிருந்து தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் அவருக்கென இடத்தை தக்கவைத்துக் கொள்வார் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்