'வெங்கடேஷ் ஐயர்' எங்களுக்கு கெடச்சதுக்கு காரணம் 'அவரு' தான்...! அவருக்குள்ள மறைஞ்சு இருந்த 'திறமைய' கரெக்ட்டா கண்டு பிடிச்சாரு...! - புகழ்ந்து தள்ளிய மோர்கன் ...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரமான வெங்கடேஷ் ஐயரை இயன் மோர்கன் புகழ்ந்துள்ள செய்தி அவரின் ரசிகர்களால் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடையும் நிலையில், அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் பரவலாக பேசப்பட்ட பெயர் கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர்.

தற்போது நடைபெற்று வரும் குவாலிபயர் போட்டிகளில் முதல் குவாலிபயர் போட்டியில் தோல்வியடைந்த டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான இரண்டாவது குவாலிபயர் போட்டி இன்று துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாத டெல்லி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதன் பின் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் டெல்லி அணியின் பந்துவீச்சை ஈசியாக எதிர்கொண்டு ஆதிக்கம் செலுத்தினர். கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களான வெங்கடேஷ் ஐயர் 55 ரன்களிலும், சுப்மன் கில் 46 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

சுலபமாக ஜெயித்து விடுவார்கள் என்று பார்த்தால் கடைசி வரை ரசிகர்களை பதற்றத்திலேயே வைத்து பிறகு கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் ரவிச்சந்திர அஸ்வின் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், ராகுல் திரிபாதி 5-வது பந்தில் சிக்ஸர் அடித்ததால் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றது.

இந்த போட்டி முடிந்த பின் கொல்கத்தா அணியின் கேப்டனான இயன் மோர்கன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, கொல்கத்தா அணியின் வெற்றிக்கு காரணமான வெங்கடேஷ் ஐயரை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

அதில், 'கொல்கத்தா அணியில் இருக்கும் வெங்கடேஷ் ஐயரின் திறமையை கண்டுபிடித்து அவருக்கு தரமான பயிற்சி அளித்து வந்தது அணி பயிற்சியாளர் பிரென்டன் மெக்கல்லம்தான்.

அவர்தான், வெங்கடேஷ் ஐயரை ஓபனராக களமிறக்க தயார்ப்படுத்தி வந்தார். இப்போது வெங்கடேஷ் ஐயரால் எந்த நாட்டின் எந்த மைதானமாக இருந்தாலும் சிறப்பாக விளையாட முடியும்' என பாராட்டி கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்