'எல்லாருமே பட்டைய கெளப்பிட்டாங்க...' ஆனாலும் இந்த 'பையன' மட்டும் 'ஸ்பெஷலா' பாராட்டியாகணும்...! - இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய மோர்கன்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த வருட ஐபிஎல் சீசனின் 21-வது லீக் போட்டி நேற்று (26-04-2021) அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட் இழந்து 37 ரன்கள் எடுத்திருந்தது. பவர்பிளேவில் விக்கெட் இழந்து கே எல் ராகுல் 19 ரன்கள் மட்டும் அடித்திருந்தார். அதன்பிறகு களமிறங்கிய கெயில், தீபக் வரிசையாக வந்த வேகம் தெரியாமல் திரும்பி சென்றனர்.

ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கிய மயங்க் அகர்வால் பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் நிதானமாக ரன் எடுத்து வந்தார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் சார்பாக மயங்க் அகர்வால் 31 மற்றும் கிறிஸ் ஜார்டன் 30 குவித்ததே அதிகபட்சமாக இருக்கிறது. கொல்கத்தா பவுலர்கள் பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் பாட் கம்மின்ஸ், சுனில் நரேன் தலா இரு விக்கெட்களை கைப்பற்றினர்.

இதனையடுத்து 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடினமில்லாத இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர்கள் கில் (9) மற்றும் ராணா (0) முதல் இரண்டு ஓவர்களிலே விக்கெட் இழந்து கொல்கத்தா அணி தடுமாறியது.  சுனில் நரேனும் டக் அவுட்டாக வெளியேறினார். திரிபாதி மற்றும் மோர்கன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தினர்.

41 ரன்கள் அடித்த திரிபாதி ஷாருக்கானிடம் கேட்ச் கொடுத்து விக்கெட் ஆனார். இதன்பிறகு மோர்கன் 47 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். 16.4 ஓவர்கள் முடிவில் 126 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா அணி.

இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கொல்கத்தா அணி கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில் “இந்த வெற்றி எங்களுக்கு ரொம்பவும் ஈசியாக கிடைக்கவில்லை. இதற்காக நாங்கள் மிகக் கடுமையான பயிற்சி மேற்கொண்டோம். மேலும் நாங்கள் எங்கள் முழு உழைப்பை செலுத்தி சிறப்பாக ஆடியுள்ளோம்.

எங்கள் அணியின் சிவம் மவிக்கு இந்த சீசனில் இதுதான் இரண்டாவது போட்டி. இவர் கிறிஸ் கெயில் விக்கெட் எடுத்து அணிக்கு உதவி செய்தார். அனைத்து பாராட்டும் சிவம் மவிக்கு தான். அவர் தான் வெற்றிக்கு முக்கிய காரணம், அவரை பாராட்டியே ஆகணும். எங்களுக்கு எங்களது ஸ்பின் பவுலர்கள் தான் பக்கபலமாக இருந்தார்கள். ” என்று தனது பவுலர்களை மனதார பாராட்டியுள்ளார் இயான் மோர்கன்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்