VIDEO: ‘கேப்டனே இப்படி பண்ணா எப்படிங்க’!.. ‘வந்த உடனே அவுட்’.. கடும் கோபத்தில் கத்திய வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கனின் செயலால் ராகுல் திருப்பதி கோபமடைந்தார்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக நிதிஷ் ரானா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் சுப்மன் கில் 11 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய ராகுல் திருப்பதி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சமயத்தில் நிதிஷ் ரானா 22 ரன்களில் அவுட்டாகி வெளியேற, அடுத்ததாக சுனில் நரேன் களமிறங்கினார். ஆனால் 6 ரன்னில் நரேனும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இதனை அடுத்து கேப்டன் இயான் மோர்கன் களமிறங்கினார். அப்போது கிறிஸ் மோரிஸ் வீசிய 11-வது ஓவரின் இரண்டாம் பந்தை எதிர்கொண்ட ராகுல் திருப்பதி, ஸ்டைர்ட் டிரைவ் திசையில் அடித்தார். ஆனால் எதிர்பாராத விதமாக நான் ஸ்ட்ரைக்கில் நின்ற இயான் மோர்கனின் பேட்டில் பந்து பட்டது. இதனால் பாதி பிட்ச் வரை ஓடி வந்த இயான் மோர்கன் ரன் ஓடாமால் பந்தையே கவனித்துக் கொண்டிருந்தார்.

இந்த சமயத்தில் ராகுல் திருப்பதி சிங்கிள் எடுக்க வேகமாக ஓடி வந்துவிட்டார். ஆனால் இயான் மோர்கன் இதை கவனிக்காததால், அவர்மீண்டும் திரும்பி ஓடிவிட்டார். இந்த சமயத்தில் இயான் மோர்கனை, கிறிஸ் மோரிஸ் ரன் அவுட் செய்தார். ரன் எடுக்க ஓடி வராமல் பந்தை வேடிக்கைப் பார்த்த கேப்டன் இயான் மோர்கன் (0) அவுட்டானாதால் ராகுல் திருப்பதி கடும் கோபத்தில் கத்தினார்.

இதனை அடுத்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே கொல்கத்தா அணி எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு சென்றது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்