எனக்கே தெரியுது, என் 'பேட்டிங்' சரியில்ல...! 'இத சொல்ல பெரிய மனசு வேணும்...' - டி-20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடுவது குறித்து 'மோர்கன்' எடுத்துள்ள முடிவு...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி-20 உலகக் கோப்பைப் போட்டியில் எனது பேட்டிங் ஃபார்ம் தொடர்ந்து மோசமாக இருக்கும் நிலையில் தான் செய்ய போகும் காரியத்தை இங்கிலாந்து கேப்டன் மோர்கன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் கேப்டன்ஷிப்பை மிகத் திறமையாக செய்கிறார், ஆனால், பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்து ஒரே போட்டியில்தான் 47 ரன்கள் அடித்தார்.

அதுவும், இந்தியாவில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் தான் அடித்தார். ஆனால், ஐக்கியஅரபு அமீரகம் சென்றபின் ஒரு போட்டியில்கூட பத்து ரன்களுக்கு மேல் தாண்டவில்லை.

2021-ஆம் ஆண்டில் இதுவரை 40 டி-20 ஆட்டங்களில் 35 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள மோர்கன் வெறும் 499 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் மோர்கனின் சராசரி என்பது 16.63 ரன்கள்தான், அதிபட்சம் ஐபிஎல் தொடரில் அடித்த 47 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் டி-20 போட்டியில் இதுவரை ஒரு அரைசதம் கூட மோர்கன் அடிக்கவில்லை. மிகவும் மோசமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் மோர்கன் எவ்வாறு உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணிக்காக கேப்டன்ஷிப் மட்டும் செய்யப்போகிறாரா அல்லது முன்பு போல் நன்றாக அடித்து ஆடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி மோர்கன் கிரிக்இன்போ தளத்துக்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,

நான் எப்போதும் சொல்வது போல், நான் அணியில் ஒரு வாய்ப்புக்குரிய வீரர்தான். உலகக் கோப்பையை வெல்லும் இங்கிலாந்து அணியின் பாதையில் தடையாக நான் இருக்கமாட்டேன். என்னுடைய பேட்டிங் ஃபார்ம் இப்போது சரியில்லை, ரன் சேர்க்க முடியவில்லை என்பதை அறிவேன்.

ஆனால், என்னுடைய கேப்டன்சி மிகச்சிறப்பாக இருக்கிறது, அது இப்போது போல் தொடரும் என்பது தான் என்னுடைய பதில். அதேநேரம் என்னுடைய பேட்டிங் ஃபார்ம் இப்படியே தொடர்ந்தால், நான் ப்ளேயிங் லெவனிலிருந்து உடனடியாக வெளியேறி விடுவேன்.

பவுலராகவோ, பீல்டிங்கிலோ ஈடுபடுவதை விரும்புவதைவிட, அணிக்கு பங்களிபதை விட கேப்டன் பணியை அதிகம் நேசிக்கிறேன். ஏற்கெனவே ஒருநாள் உலகக் கோப்பையை வென்றிருக்கிறோம், இப்போது டி-20 உலகக் கோப்பையையும் வென்றால் சிறப்பாக இருக்கும்.

கடந்த ஆறு வருடங்களாக எங்கள் அணியில் ஒரு குறிப்பிட்ட வீரர்கள் குழுவாக இருக்கிறார்கள், அணியிலிருந்து நீக்கப்படவில்லை. சிலதிறமையான இளம் வீரர்கள் அணிக்குள் வந்திருக்கிறார்கள். இவர்களின் வருகையால் அணி முன்பை விட இன்னும் வலிமையான அணியாக மாறியுள்ளது.

எங்களுடைய அதிகபட்ச திறமையை வெளிப்படுத்த எப்போதுமே முயற்சி செய்வோம். எப்போதும் போல் சிறந்த அணியாக இருக்கவே முயற்சிப்போம். கடந்த 2019்-ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் பவுலிங், பேட்டிங், பீல்டிங்கில் நிலைத்தன்மையுடன் விளையாடி வருகிறோம்.' இவ்வாறு மோர்கன் உருக்கமாக கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்