"அவர எல்லாம் 'தோனி' கூட 'கம்பேர்' பண்ணாதீங்க.. அப்டி ஒண்ணும் பெருசா அவரு சாதிக்கல.." செம கடுப்பில் பேசிய 'சேவாக்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.

இந்த ஐபிஎல் சீசனில், இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி, ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டு, புள்ளிப் பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது. அது மட்டுமில்லாமல், கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கனின் தலைமையும் கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், பந்து வீச்சாளரை சரியாக மோர்கன் பயன்படுத்தவில்லை எனக்கூறி, கம்பீர் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.

இதனையடுத்து, சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா தோல்வியைடந்த நிலையில், மோர்கன் கேப்டன்சி குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் (Sehwag) விமர்சனம் செய்து கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'இயான் மோர்கனை (Eoin Morgan) சிறந்த டி 20 கேப்டனாக நான் கருதவில்லை. ஒரு நாள் கிரிக்கெட்டில் வேண்டுமானால், அவர் சிறந்த கேப்டனாக இருக்கலாம்.


ஏனென்றால், அவரது ஒரு நாள் அணியில், சிறந்த மேட்ச் வின்னர்கள் உள்ளனர். ஆனால், ஐபிஎல் தொடரில் அவரிடம் அது போன்ற வெற்றி அணி இல்லை. அதே போல, மோர்கனும் சிறந்த டி 20 கேப்டன் இல்லை. இதனால், மோர்கனை தோனியுடன் ஒப்பிடுவது சரியல்ல.

மேலும், இங்கிலாந்து அணியைப் போல வலுவான அணியாகவும் கொல்கத்தா அமையவில்லை. ஏனெனில், ஒரு அணியின் கேப்டன் எந்தளவுக்கு சிறந்தவரோ, அந்த அளவுக்கு தான் அணியும் வலுவாக இருக்கும். நல்ல ஐபிஎல் அணியாக கொல்கத்தாவை மோர்கன் கட்டமைத்தால், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அந்த அணி சிறப்பாக செயல்படலாம். இல்லையெனில், அந்த அணியில், இரண்டு பேட்ஸ்மேன்கள் மற்றும் 2 பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து சிறப்பாக ஆடினாலே, கொல்கத்தா அணி தொடர்ந்து வெற்றி பெறலாம்.

ஆனால், இந்த தருணத்தில் என்னால் மோர்கனை சிறந்த டி 20 கேப்டனாக பார்க்க முடியவில்லை' என சேவாக் இயான் மோர்கனின் கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சென்னை அணிக்கு எதிரான போட்டியில், தாமதமாக பந்து வீசியதாக, மோர்கனுக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்