நேத்து நைட் ‘DK’ எங்கிட்ட பேசினார்.. ஆனா ‘இப்டி’ சொல்வார்னு யாருமே எதிர்பாக்கல.. ‘புது கேப்டன்’ சொன்ன சீக்ரெட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கேப்டன் பதவியை ராஜினாமா செய்யும் முன் தினேஷ் கார்த்திக் தன்னை சந்தித்து பேசியதாக இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் இன்று விலகினார். இதனால் கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டனாக இயான் மோர்கன் பதவி ஏற்றுள்ளார். இவர் கடந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இயான் மோர்கன் பேட்டியில், ‘நேற்று இரவு தினேஷ் கார்த்திக் என்னிடம் வந்து பேசினார். நான் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று கூறினார். அதோடு என்னிடம் கேப்டன் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டார். அவரின் முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை.

அணியில் இருக்கும் யாரும் தினேஷ் கார்த்திக் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் கூட அவருக்கு சுயநலம் கிடையாது. எப்படிப்பட்ட மனிதர் அவர். அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். எப்படி அணியை முன்னிறுத்த வேண்டும் என்பதை அவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

இதுதான் அணிக்கு நன்றாக இருக்கும் என்று டிகே (தினேஷ் கார்த்திக்) கூறினார். இதுபோன்ற முடிவுகளை எடுக்க மிகப்பெரிய தைரியம் வேண்டும்.கொல்கத்தா அணியை வழி நடத்துவதில் பெருமை கொள்கிறேன். வீரர்களுடன் இணைந்து ஒன்றாக செயல்பட விரும்புகிறேன். பாதி தொடர்தான் முடிந்து உள்ளது. நாங்கள் போட்ட சில திட்டங்கள் சரியாக பலன் அளிக்கவில்லை. விரைவில் புதிய திட்டங்களை வகுப்போம். இன்று நடக்கும் போட்டி எங்களுக்கு முக்கியமானதாக இருக்கும்’ என்று இயான் மோர்கன் கூறியுள்ளார்.

அதேபோல் கொல்கத்தா அணியின் சிஇஓ வெங்கி மைசூர், தினேஷ் கார்த்திக் குறித்து தெரிவித்துள்ளார். அதில்,‘தினேஷ் கார்த்திக் போன்ற தலைவர்கள் அணியில் இருப்பதை பாராட்டுகிறோம். அவருக்கு எப்போதும் அணிதான் முக்கியம். இதுபோன்ற முடிவுகளை எடுக்க பெரிய தைரியம் வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இன்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்