VIDEO: ‘இதுக்கெல்லாமா DRS கேப்பாங்க?’.. 'ரெண்டும் ரெண்டும் நாலுனு கால்குலேட்டர்ல போட்டு செக் பண்ற மாதிரி'.. விக்கெட் கேட்ட இங்கிலாந்து.. வெச்சு செய்யும் நெட்டிசன்கள்! வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சவுதாம்ப்டனில் நடந்துவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி, ஆனால், அது அவுட் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தும் டிஆர்எஸ் முறையில் அவுட் கேட்டது ரசிகர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானது. அதில், ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது 7 வது ஓவரின் 3வது வந்தை இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ரஷித் லெக் பிரேக் ஆக வீச, ஆரோன் பின்ச் அந்த பந்தை பார்வர்டு டிஃபன்ஸ் முறையில் பேட்டின் மத்திய பகுதியில் படும்படி தடுத்தார். ஆனால், பந்து அவரது காலில் பட்டதாக இங்கிலாந்து வீரர்கள் அவுட் கேட்க, அம்பயர் அவுட் கொடுக்க மறுக்க, ஒருமுறை டிஆர்எஸ் ரிவ்யூவும் கேட்டு அதிர வைத்தனர் இங்கிலாந்து வீரர்கள்.

 

பின்னர் ரீப்ளேவில் பந்து முழுமையாக ஆரோன் பின்ச்சின் பேட்டில் படுவது தெரியவந்ததை அடுத்து இங்கிலாந்து அணி ஒரு ரிவ்யூவை இழந்தது. இதனால் நெட்டிசன்கள் "இதுக்கெல்லாமா அவுட் கேப்பீங்க?" எஎன்று கிண்டல் செய்யத் துவங்கி,  டிஆர்எஸ் வரலாற்றிலேயே மோசமான ரிவ்யூ என்றும் கூறி இருந்தனர்.

ஒருவர் ஒருபடி மேலே போய், தேர்வில் 2 + 2 = 4 என்பதையே கால்குலேட்டரில் போட்டு சரி பார்த்துக் கொள்வது போல, இது விக்கெட் இல்லை என்பதை டிஆர்எஸ் ரிவ்யூ கேட்டு இங்கிலாந்து அணி சரிபார்த்துக்கொண்டதாக ட்வீட் பதிவிட்டார். எனினும் அந்த போட்டியில் இங்கிலாந்து அணி 18.5 ஓவர்களில் இலக்கை பிடித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றும் ரசிகர்களிடம் அர்ச்சனை வாங்கிக்கொண்டது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்