‘இது மட்டும் கன்ஃபார்ம் ஆச்சுனா.. உங்க இங்கிலாந்து டூர் அதோட முடிஞ்சதுன்னு நினச்சிக்கோங்க’!.. வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இங்கிலாந்தில் வரும் ஜூன் 18 முதல் 22-ம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில் நியூஸிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

இதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, வரும் ஜூன் மாதம் 2-ம் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது. மொத்தம் 20 வீரர்களுடன் 4 மாற்று வீரர்களும் உடன் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். அதனால் மே 25-ம் தேதி முதல் இந்திய வீரர்கள் பயோ-பபுளில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் அனைவரும் 8 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். இந்த தனிமைப்படுத்தலின் போது 3 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்பின்னர் ஜூன் 2-ம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு, அங்கு மேலும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

இந்த நிலையில் பிசிசிஐ முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. இதுகுறித்து The Indian Express ஊடகத்தில் வெளியான செய்திக் குறிப்பில், ‘மும்பைக்கு வரும் வரை வீரர்கள் தங்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை மும்பையில் நடத்தப்படும் பரிசோதனையில் யாருக்காவது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவருக்கென்று தனி விமானம் எல்லாம் ஏற்பாடு செய்து தரப்பட மாட்டாது. அத்துடன் தங்களது இங்கிலாந்து பயணம் முடிவுக்கு வந்துவிட்டது என்று எண்ணிக் கொள்ளலாம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் இருக்கும் என்பதால், வீரர்கள் தங்களது குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் செல்ல பிசிசிஐ அனுமதித்துள்ளது. அதனால் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. பரிசோதனையில் நெகட்டீவ் என வந்தால் மட்டுமே குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்ல முடியும் எனக் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்