'சென்னையில் கறுப்பு பட்டையுடன் களமிறங்கிய வீரர்கள்'... 'பின்னணியில் 100 வயது மனிதர்'... இப்படி ஒருத்தரா?, நெகிழ்ந்துபோன நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பித்தது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளிலும் சதமடித்திருந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இன்றைய போட்டியிலும் 128 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
இந்நிலையில், இந்த போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து கொண்டு ஆடினர். பிரிட்டிஷ் ராணுவத்தின் முன்னாள் கேப்டனும், கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த சர் டாம் முர்ரேயின் நினைவாக, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கையில் கறுப்பு பட்டை அணிந்து கொண்டு ஆடினர்.
கொரோனா தொற்று காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முர்ரே, கடந்த சில தினங்களுக்கு முன் தனது நூறாவது வயதில் உயிரிழந்தார். 100 வயதில் கூட, முதிர்ச்சியின் காரணமாக ஒதுங்கிக் கொள்ளாமல், களத்தில் இறங்கி, கொரோனா தொற்றிற்காக நிதி திரட்டியுள்ளார். அது மட்டுமில்லாமல், சுமார் 300 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி ஒவ்வொரு இங்கிலாந்து மக்களின் மனதிலும் அவர் இடம் பிடித்திருந்தார்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இங்கிலாந்து வீரர்கள் இன்று கறுப்பு பட்டை அணிந்து கொண்டு ஆடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என்னடா, சோடா தெளிச்சு தெளிச்சு அடிக்குறீங்க'... 'டிம் பெயினை வச்சு செய்யும் மீம்ஸ்'... கொளுத்திபோட்ட இந்திய கிரிக்கெட் பிரபலம்!
- 'நல்லா விளையாடுற மனுஷன், இன்னைக்கும் டீம்ல இல்ல'... 'ஏன் வேணும்ன்னு கட்டம் கட்டுறீங்களா'?... கொந்தளித்த ரசிகர்கள்!
- "அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல... என்ன இந்த மனுஷன் இப்டி சொல்லிட்டாரு..." 'கம்பீர்' சொன்ன 'பரபரப்பு' கருத்து!!!
- "அடுத்த '10' வருஷம்... 'டெஸ்ட்' கிரிக்கெட்ல இவரை அசைக்க முடியாது... உலகமே அவர திரும்பி பாக்கும்..." இந்திய வீரரை பாராட்டிய முன்னாள் ஆஸி. 'வீரர்'!!!
- "என்னோட சொந்த 'ஊர்' வந்துருக்கீங்க... சும்மா பட்டைய கெளப்புங்க..." 'இங்கிலாந்து' கிரிக்கெட் வீரர்களை வரவேற்று 'பிரபலம்' போட்ட 'ட்வீட்'!!!
- "இந்த உலகமே பைத்தியமாயிடுச்சு"... கடுப்பாகி 'முன்னாள்' வீரர் போட்ட 'ட்வீட்'!!... பரபரப்பை உண்டு பண்ணிய 'சம்பவம்'!!!
- "ரொம்ப ஜாலியா இருக்காதீங்க... இனி தான் உங்களுக்கு பிரச்சனையே!!..." - 'இந்திய' அணிக்கு எச்சரிக்கை விடுத்த முன்னாள் 'வீரர்'!!!
- 'வேர்ல்ட் கப்'ல இந்தியா வேணும்னே தோத்துச்சு... 'சந்தேகமே' இல்ல... 'இதுக்காக' தான் அப்படி பண்ணாங்க!
- ஓடாம 'ரன்' எடுத்தோம் ... 'சும்மா'வே உக்காந்து 'வின்' எடுத்தோம் ... முதன் முறையாக இந்திய மகளிர் அணி செய்த சாதனை !