இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்து.. இது நிஜமாவே 1992 ஸ்க்ரிப்ட் தான் போலயே.. என்ன இவ்வளவு கனெக்ஷன்ஸ் இருக்கு?..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது இங்கிலாந்து.  இந்த வெற்றியின் மூலமாக T20 இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது இங்கிலாந்து. இதனிடையே, நடப்பு T20 உலகக்கோப்பை தொடரை 1992 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியுடன் ஒப்பிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertising
>
Advertising

Also Read | "மேட்ச் ஆரம்பிச்சதும் வீரர்கள் ஒண்ணு சொன்னாங்க".. தோல்விக்கு பின் மனம்திறந்த டிராவிட்!!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சூப்பர் 12 சுற்றின் முடிவுகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தது. முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனிடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது இந்தியா. இதில் முதலில் ஆடிய இந்தியா 168 ரன்கள் எடுக்க, இதனை 16 ஓவரில் விக்கெட் இழப்பின்றி வென்றது இங்கிலாந்து. இதன்மூலமாக 13 ஆம் தேதி நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து களமிறங்குகிறது இங்கிலாந்து.

நடப்பு T20 தொடருக்கும் 1992 உலகக் கோப்பைக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. 1992 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையில் தொடரை விட்டு வெளியேறும் நிலையில் இருந்த பாகிஸ்தான், 4 ஆம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவை ஒரு புள்ளியின் மூலமாக பின்னுக்கு தள்ளி 4 வது இடத்தை பிடித்தது.

அதேபோல, நடப்பு தொடரில் கிட்டத்தட்ட வெளியேறும் நிலையில் இருந்த பாகிஸ்தான் ஒரு புள்ளியில் தென்னாப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளி அரையிறுதிக்குள் நுழைந்திருந்தது.

1992 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மற்றொரு அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டியில் கால் பதித்தது.

நடப்பு தொடரிலும் பாகிஸ்தான் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தேர்வாகியது. அதேபோல, இங்கிலாந்து இந்தியாவை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது.

1992 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இங்கிலாந்தை வென்றது. அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள். தற்போதைய சூழ்நிலையிலும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சில் அசுர பலத்துடன் திகழ்கிறது. ஆனால் 13 ஆம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் 1992 போலவே பாகிஸ்தான் வெற்றிபெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Also Read | கும்மிருட்டில் சென்னை.. தமிழகம் முழுவதும் தட்டி வீசும் மழை.. அடுத்த 3 மணி நேரத்துக்கு இப்படித்தானாம்.!

CRICKET, T20 WORLD CUP, ENGLAND PAKISTAN T20WC FINAL, 1992 WC

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்