'மன்னிப்பே கிடையாது'!.. 8 ஆண்டுகளுக்கு முன் செய்த தவறு!.. தோண்டி எடுத்த நிர்வாகம்!.. சாதனை நாயகன் அதிரடி நீக்கம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே தன்னை ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக நிரூபித்த ஓலே ராபின்சன், இப்போது அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையேயான லண்டனில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி, டிராவில் முடிந்தது.
இதில், இங்கிலாந்து அணியில் அறிமுகம் செய்யப்பட்ட ஓலே ராபின்சன், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், 42 ரன்களும் எடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். ஆனால், அவரது தனிப்பட்ட நடத்தை தற்போது அவருடைய கிரிக்கெட் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாகியுள்ளது.
இங்கிலாந்தின் அறிமுக வீரர் ஓலே ராபின்சன், 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தனது ட்விட்டரில் இனவெறி மற்றும் பாலியல் குறித்து செய்த ட்வீட்ஸ் சர்ச்சையில் சிக்கியது. முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற முதல் நாளிலேயே, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அவர் தனது ட்வீட் ஒன்றில், வீடியோ கேம்ஸ் விளையாடும் பெண்கள், உண்மையில் கேம்ஸ் விளையாடாத பெண்களை விட அதிக உடலுறவு கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதுபோல், இனவெறி குறித்தும் ட்வீட் செய்திருக்கிறார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் பதிவிட்ட ட்வீட் இப்போது சர்ச்சையாக, அதற்கு ராபின்சன் பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தார். மேலும், டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த பிறகு அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர், எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த மிகப் பெரிய நாளில், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பதிவிட்ட இனவெறி மற்றும் பாலியல் ட்வீட்களைப் பற்றி நான் வெட்கப்படுகிறேன். நான் இனவெறியாளன் அல்ல, நான் sexist அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது செயல்களுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். இதுபோன்ற கருத்துகளை தெரிவித்ததில் நான் வெட்கப்படுகிறேன். நான் சிந்தனையற்றவனாகவும், பொறுப்பற்றவனாகவும் இருந்தேன். அந்த நேரத்தில் எனது மனநிலையை மீறி நான் செய்த செயல்கள் மன்னிக்க முடியாதவை.
அந்த காலத்திலிருந்து நான் ஒரு நபராக முதிர்ச்சியடைந்தேன். எனது ட்வீட்டுகளுக்கு முழுமையாக வருந்துகிறேன். கடந்த சில ஆண்டுகளில், எனது வாழ்க்கையை மாற்ற நான் கடுமையாக உழைத்தேன். நான் முதிர்ச்சியடைந்தேன். நான் புண்படுத்திய அனைவரிடமும், எனது அணி வீரர்கள் மற்றும் ஒட்டுமொத்த விளையாட்டிற்கும் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், இங்கிலாந்து பேட்டிங் பயிற்சியாளர் கிரஹாம் தோர்ப் கூறுகையில், எதிர்காலத்தில் இனிமேல் ராபின்சன் சம்பவம் போல் நிகழாமல் இருக்க, புதிதாக அணியில் இணையும் வீரர்களின் கடந்த கால சமூக வலைதள ட்வீட்ஸ், மெசேஜஸ் குறித்து ஆய்வு செய்யப்படும். ராபின்சன் தனது செயல் குறித்து இங்கிலாந்து அணிக்கும், இந்த உலகிற்கும் மன்னிப்பு கேட்க வேண்டியுள்ளது என்று கூறியிருந்தார். இதனால் அவருக்கு மீண்டும் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது. முதல் போட்டியில் அவர் தனது அபாரமான ஆல் ரவுண்டர் ஆட்டத்தை நிரூபித்து இருந்தாலும், இப்போது அவரது கிரிக்கெட் வாழ்க்கையே அவரது தனிப்பட்ட குணத்தால் தடைப்பட்டுவிட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஊரே 'தலையில' தூக்கி வச்சு கொண்டாடுறாங்க...! 'ஏன்'னு எனக்கு புரியவே இல்ல...!- 'இந்திய' வீரர் குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொன்ன 'கருத்தால்' பரபரப்பு...!
- 'டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில்... இந்தியாவின் பவுலிங் சூப்பர்ஸ்டார் 'இவர்' தான்!.. கண்டிப்பா டீம்ல எடுக்கணும்'!.. முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்!
- 'இதுவரை யாரும் பார்க்காத... ரோகித்தின் இன்னொரு முகம்'!.. 'டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக புதிய அவதாரம்'!.. அசந்து போன பயிற்சியாளர்!
- 'டெஸ்ட் சாம்பியன்ஷிப் final பக்கத்துல வந்துருச்சு'!.. சீக்கிரம் 'அந்த' தவறை திருத்துங்க கோலி'!.. முன்னாள் வீரர் கண்டுபிடித்த முக்கிய மிஸ்டேக்!
- 'இந்த சின்ன விஷயத்துக்கு கூட அனுமதி இல்லை'!.. கடுமையான குவாரண்டைன்!.. இந்திய வீரர்களிடம் இங்கிலாந்து கெடுபிடி!
- 'அசாத்திய பவுலிங் திறமை இருந்தும்... அடுத்த போட்டிக்கு வாய்ப்பு இல்லை'!?.. கெஞ்சும் இளம் வீரர்!.. கொந்தளிப்பில் இங்கிலாந்து கிரிக்கெட்!
- 'நான் இல்லாம டெஸ்ட் சாம்பியன்ஷிப்பா'!?.. 'Never!'.. வேற லெவல் சம்பவத்துக்கு தயாராகும் தினேஷ் கார்த்திக்!.. ஏன் இந்த திடீர் முடிவு?
- இங்கிலாந்து டூர்... மும்பையில் தங்கியிருந்த இளம் வீரரை கழற்றிவிட்ட இந்திய அணி!.. ஆசை காட்டி மோசம் செய்ததா பிசிசிஐ?
- '125 ஆண்டு வரலாற்றை.. ஒரே நாளில் சுக்கு நூறாக நொறுக்கிய கான்வே'!.. உலக சாதனை!.. கொண்டாடும் நியூசிலாந்து!.. அலர்ட்டான இந்திய அணி!
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்... 'யார் ஜெயிச்சாலும்... தொடர் நாயகன் விருது இவருக்கு தான் கொடுக்கணும்'!.. விடாப்பிடியாக இருக்கும் ஹர்பஜன்!