"இந்தியாக்கு அந்த 'பிளேயர்' எப்படியோ.. அந்த மாதிரி நம்ம 'டீம்'க்கும் ஒருத்தரு வேணும்.. அவர 'Copy' அடிச்சாச்சும் பெரிய ஆளா வாங்கப்பா.." ஏங்கிய 'பீட்டர்சன்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, வரும் ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரையில், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும், இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள், அதிக பலத்துடன் காணப்படுகிறது. இதனால், முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்ற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை.
அது மட்டுமில்லாமல், சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி, வெளிநாட்டு மைதானங்களில், மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனுபவ வீரர்களும், இளம் வீரர்களும் கலந்துள்ள இந்திய அணி, எத்தகைய பலம் வாய்ந்த அணியையும் அச்சுறுத்தும் வகையில் தயாராக உள்ளது. அதிலும் குறிப்பாக, தனது சுழற்பந்து வீச்சால் எதிரணியினரை அச்சுறுத்தும் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja), பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும், இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார்.
இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் (Kevin Pietersen), ரவீந்திர ஜடேஜாவைப் பாராட்டி, சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'பேட்டிங்கும் செய்யக் கூடிய, ஒரு சிறந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர், இங்கிலாந்து அணியில் இல்லை என்பது எனக்கு வருத்தமளிக்கிறது. டெஸ்ட் போட்டி, ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில், இந்திய அணிக்காக ரவீந்திர ஜடேஜா என்ன செய்துள்ளார் என்பதை பாருங்கள்.
அப்படிப்பட்ட ஒரு வீரருக்கு தான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்னுரிமை அளிக்க வேண்டிய நிலையில் உள்ளது. அப்படி ஒரு வீரர் கிடைத்தால், மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விலை மதிப்பில்லாத வீரராக, இங்கிலாந்து அணிக்கு அவர் திகழ்வார். நீங்கள் ஒரு குழந்தை ஆகவோ, அல்லது வளர்ந்து வீராகவோ, அல்லது கவுண்டி வீராகவோ யாராக இருந்தாலும் சரி, ஜடேஜா செய்வதை அப்படியே காப்பி செய்யுங்கள்.
ஜடேஜா ஒரு சூப்பர் ஸ்டார் என்பதால், அவர் செய்வதை அப்படியே திரும்பச் செய்யுங்கள். அப்படி செய்யும் போது, இங்கிலாந்து அணிக்கான நீண்ட கால டெஸ்ட் கிரிக்கெட் வீரராக நீங்கள் வளருவீர்கள்' என பீட்டர்சன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்று ஆரம்பமானது.
இதன் முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணியில், வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட அணியை களமிறக்கியுள்ளது பற்றி பேசிய கெவின் பீட்டர்சன், 'லார்ட்ஸ் மைதானத்தில், சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இங்கிலாந்து அணி ஆடி வருகிறது. இங்கிலாந்து அணியின் தேர்வு முறை, எந்த அளவுக்கு உள்ளது என்பதைத் தான் இது காட்டுகிறது.
இங்கிலாந்து அணி நிச்சயம் ஒரு இடதுகை சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டரை அடையாளம் கண்டு, அவரை சரியாக உருவாக்க வேண்டும். இல்லையெனில், அந்த துறை நிச்சயம் பலவீனமானதாக இருக்கும்' என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "என்ன இப்படி ஒரு 'பிளான்' பண்ணி 'இங்கிலாந்து' கிளம்பி போறீங்க??.." நினைக்கவே 'விசித்திரமா' இருக்கு.." 'கிழித்து தொங்க விட்ட 'முன்னாள்' வீரர்!!
- "இவர மாதிரி ஒரு 'ஜீனியஸ' கிரிக்கெட்'ல பாக்குறதே ரொம்ப 'அபூர்வம்'.." 'இந்திய' வீரரை தாறுமாறாக பாராட்டிய 'ரமீஸ் ராஜா'!!
- "இவர கண்டிப்பா 'டீம்'ல சேர்த்து இருக்கணும்.. 'இந்தியா' டீம் பண்ண தப்புக்கு கண்டிப்பா ஃபீல் பண்ணுவாங்க.." வருத்தப்பட்ட 'முன்னாள்' வீரர்!!
- "'ஃபைனல்ஸ்' ஆடுறது எல்லாம் சரி.. ஆனா, இந்த நெனப்புல மட்டும் ஆடுனீங்க.. அப்புறம் நீங்க தான் வருத்தப்படுவீங்க.." 'இந்திய' அணியை எச்சரித்த 'முன்னாள்' வீரர்!!
- "நீங்க எல்லாரும் அப்படியே நெனச்சுட்டு இருங்க.. 'கொஞ்ச' நாள்ல தெரியும்.. யாரு சொன்னது நடக்கப் போகுது'ன்னு??.." மொத்தமாக 'கிழித்து' தொங்க விட்ட 'சுனில் கவாஸ்கர்'!!
- ரொம்ப ஸ்மார்ட்டா 'கோலி' விரிச்ச 'வலை'.. "அதுல சிக்காம எப்படி 'சைக்கிள்' கேப்'ல தப்பிச்சாரு பாத்தீங்களா??.." 'இளம்' வீரருக்கு கிடைத்த அசத்தல் 'பாராட்டு'!!
- "இந்தியா 'டீம்'ல எல்லாம் ஓகே தான்.. ஆனா, இந்த ஒரு விஷயத்த நெனச்சா தான் ரொம்ப கவலையா இருக்கு.." காத்திருக்கும் மிகப்பெரிய 'சவால்'.. "என்ன செய்யப் போறாங்களோ??"
- என்ன ஒரு வில்லத்தனம்!.. பேட்டை வாள் மாதிரி சுழற்றுவது ஏன்?.. ஒண்டிக்கு ஒண்டி சண்டையிட ரெடியான ஜடேஜா!.. மாஸ் சம்பவம்!
- "அந்த ஒன்றரை 'வருசம்'.. ஒழுங்கா ஒரு நாள் கூட என்னால தூங்க முடியல.." 'ஜடேஜா' வாழ்வில் வந்த 'சோதனை'.. "அவருக்குள்ள இப்படி ஒரு சோகமா?!"
- ‘பார்த்தாலே வெறலெவல்ல இருக்கே’!.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா அணியபோகும் ஜெர்சி.. ரசிகர்களுக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த பிசிசிஐ..!