"அர்ஜென்டினா ஜெயிச்சது, எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடிச்சது இருக்கட்டும்".. கால்பந்து உலக கோப்பைல இங்கிலாந்து டீம் ஹிஸ்டரி தெரியுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த உலகமே கால்பந்து உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டி குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "இந்தியாவில் கால்பந்து உலக கோப்பை நடத்துற நாளும்".. பிரதமர் மோடியின் அதிரடி பேச்சு!!

உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள விளையாட்டு கால்பந்து. இதன் உலக கோப்பை தொடர், கடந்த நவம்பர் மாதம் கத்தாரில் வைத்து ஆரம்பமாகி இருந்தது. அந்த நாள் முதல், இறுதி போட்டி நடந்து முடிந்த தினம் வரை உலக அளவில் கால்பந்து ரசிகர்கள் பரபரப்பாக தான் இருந்தனர்.

இதற்கு மத்தியில், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகளும் இறுதி போட்டியில் தகுதி பெற்றிருந்தன. ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இறுதி போட்டியின் ஒவ்வொரு நிமிடமும் அனல் பறக்கும் வகையில் தான் அமைந்திருந்தது.

முதல் பாதி முழுக்க அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தி இருந்த நிலையில், அந்த அணி 2 கோல்களையும் அடித்திருந்தது. இரண்டாவது பாதியில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் எம்பாப்வே, இரண்டு நிமிட இடைவெளியில் 2 கோல்களை அடித்து அர்ஜென்டினா அணிக்கும் அவர்களின் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை அளித்திருந்தார். கூடுதல் நேரத்தின் முடிவில், 3 - 3 என்ற கணக்கில் சமனாக இருக்க, பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் 4 - 2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி, மூன்றாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணிக்கு உலக அளவில் உள்ள ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் சூழலில் கால்பந்து போட்டிகள் குறித்த செய்திகள் தான் இணையத்தை அதிகம் ஆக்கிரமித்து வருகிறது. இந்த நிலையில், உலக கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது பற்றிய விவரங்களும் அதிகம் வைரலாகி வருகிறது.

கால்பந்து உலக கோப்பைத் தொடரில், இங்கிலாந்து அணி கடைசியாக 1966 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.

இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த கால்பந்து உலக கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணி முதல் முறையாக உலக கோப்பையைக் கைப்பற்றி இருந்தது. ஆனால், அதன் பிறகு இதுவரை ஒரு முறை கூட இங்கிலாந்து கால்பந்து அணி, உலக கோப்பையை கைப்பற்றியது கிடையாது.

இதுவரையில், இங்கிலாந்து கால்பந்து அணி முதலாவதாகவும், கடைசியாகவும் வென்ற உலக கோப்பை கால்பந்து தொடர் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் தொடர்ந்து ஆடி வரும் இங்கிலாந்து கால்பந்து அணி, 5 முறை காலிறுதி சுற்றுக்கும், இரண்டு முறை அரையிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. ஆனால், ஒரு முறை கூட இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை. தற்போது நடந்து முடிந்த கால்பந்து உலக கோப்பைத் தொடரில் கூட, காலிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்த இங்கிலாந்து அணி, பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறி இருந்தது.

ஒரு பக்கம், அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது குறித்தும், எம்பாப்பே ஹாட்ரிக் கோல்கள் குறித்தும் கால்பந்து ரசிகர்கள் பேசி வரும் அதே வேளையில், இங்கிலாந்து அணியின் உலக கோப்பை கால்பந்து வெற்றிக் கனவு, சுமார் 56 ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்து வருவதை பற்றியும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "மொத்த உலகமும் தேடுன விஷயம்".. திகைச்சு நின்ன Google.. 25 ஆண்டுகளில் இல்லாத டிராபிக் - சுந்தர் பிச்சை!!

FIFAWC2022, ENGLAND FOOTBALL TEAM, FIFA WORLD CUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்