'ஏம்பா கடைசியில இப்டி ஆகிடுச்சே'... 'அதிரடி காட்டிய ஐ.சி.சி.'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இருவர் ஆட்டத்தின் விதிகளை மீறியதால், போட்டி ஊதியத்தில் இருந்து 15% அபராதம் ஐசிசி விதித்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டனில்  நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில்  இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும் போது 14-வது ஓவரில் ஜேசன் ராய் கேட்ச் ஒன்றை தவற விட்டார். அப்போது அவர் தகாத வார்த்தையை பயன்படுத்தியதாக தெரிகிறது. இதனால் இவருக்கு  போட்டி ஊதியத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதே ஆட்டத்தில் மற்றொரு இங்கிலாந்து வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சர், பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும் போது 27-வது ஓவரில் அவர் வீசிய பந்தை வைட் என நடுவர் தெரிவித்ததால் அதிருப்தி அடைந்தார்.

அத்துடன் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனவே இவருக்கு  போட்டி  ஊதியத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ராய் மற்றும் ஆர்ச்சர் ஆகியோரின் மீது ஒழுங்குமுறைப் பதிவுகளில் ஒரு சஸ்பென்ஷன் புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டு வருட காலத்திற்குள் நான்கு சஸ்பென்ஷன் புள்ளிகள் பெற்றால் அந்த வீரர் சஸ்பெண்ட் செய்யப்படுவார்.

இதேப்போல ஆமை வேகத்தில் பவுலிங் செய்த பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஜ் அஹமதுக்கு 20% அபராதமும் மற்ற வீரர்களுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 10% அபராதமும் ஐசிசி விதித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்