ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் ஹிஸ்டரிய மாத்தி எழுதுன இங்கிலாந்து..! T20WorldCup2022

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்தது இந்திய அணி.

Advertising
>
Advertising

சூப்பர் 12 சுற்றில் ஐந்து போட்டிகள் ஆடி இருந்த இந்திய அணி, நான்கில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலிலும் முதலிடம் பிடித்திருந்தது.

மேலும் இந்த முறை நிச்சயம் டி 20 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

கடந்த முறை லீக் சுற்றுடன் வெளியேறி இருந்த இந்திய அணி, இந்த முறை அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்ததால் ரசிகர்கள் ஆவலும் அதிகமாகி இருந்தது. அப்படி ஒரு சூழலில், அடிலெய்டு மைதானத்தில் நடந்த இரண்டாவது அரை இறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆடி இருந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் விக்கெட்டுகள் எதையும் இழக்காமல், 16 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற உதவினர்.

8 வது டி 20 உலக கோப்பையின் இறுதி போட்டியில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் நவம்பர் 13 ஆம் தேதி மோத உள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் டி 20 போட்டிகளில் எந்த அணிகளும் செய்யாத ஒரு விஷயத்தை செய்து பட்டையைக் கிளப்பி உள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு முன்பு வரை அடிலெய்ட் மைதானத்தில் 11 டி 20 போட்டிகள் நடந்துள்ளது. இந்த 11 போட்டிகளிலும் டாஸ் வென்ற அணி தோல்வியை தழுவி இருந்தது.

ஆனால், இந்தியாவுக்கு எதிராக நடந்த அரை இறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி தான் வெற்றி வாகை சூடி உள்ளது. இதற்கு முன்பு 11 முறை ஒரே மாதிரி டி 20 போட்டியில் நடந்த வரலாற்றை அடிலெய்ட் மைதானத்தில் மாற்றி எழுதியும் சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி.

IND VS ENG, T20 WORLD CUP 2022, JOS BUTLER, ALEX HALES, ADELAIDE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்