‘இதுவரை ஆதரவு கொடுத்த எல்லாருக்கும் நன்றி’!.. சிஎஸ்கே ஆல்ரவுண்டர் வெளியிட்ட ‘திடீர்’ அறிக்கை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான மொயின் அலி (Moeen Ali), சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் (Test Cricket) இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர், ‘நீண்ட நாள்கள் கிரிக்கெட்டை அனுபவத்து விளையாட விரும்புகிறேன். தற்போது எனக்கு 34 வயதாகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் எடுத்த விக்கெட்டுகள், ரன்கள் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஒருநாள், டி20 போட்டியை விட டெஸ்ட் கிடிக்கெட்டில் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

நான் டெஸ்ட் கிரிக்கெட்டை அனுபவத்து விளையாடி உள்ளேன். அதன் ஆழம் சில நேரங்களில் தீவிரமானதாக இருக்கும். எனக்கு ஆதரவு அளித்த பயிற்சியாளர்கள், கேப்டன்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. ஜோ ரூட் தலைமையில் நான் டெஸ்ட் கிரிக்கெட்டை ரசித்து விளையாடியுள்ளேன்.

என் பெற்றோரும், குடும்பமும் இல்லாமல் என்னால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்க முடியாது. ஒவ்வொரு போட்டியும் அவர்களுக்காகவே விளையாடியுள்ளேன். என்னைப் பார்த்து அவர்கள் பெருமையடைவார்கள் என எனக்கு தெரியும். நீண்ட காலம் என் குடும்பத்தை பிரிந்து விளையாடுவது சரியானது இல்லை என நினைக்கிறேன். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். ஆனாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்’ என மொயின் அலி குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மொயின் அலி, 2914 ரன்களை எடுத்துள்ளார். அதில் 5 சதங்கள், 14 அரைசதங்களை அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், 195 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதில் 5 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். மொயின் அலி கடைசியாக, சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி இருந்தார்.

தற்போது ஐபிஎல் (IPL) தொடரில் சிஎஸ்கே (CSK) அணிக்காக அவர் விளையாடி வருகிறார். இந்த தொடரின் ஆரம்பம் முதலே பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை மொயின் அலி வெளிப்படுத்தி வருகிறார். அதேபோல் சிஎஸ்கே அணியும் தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி, அதில் 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்