VIDEO: ‘நியாயமா பார்த்தா அவர்தான் உங்கள திட்டணும்’.. கிரவுண்டில் ‘காமெடி’ பண்ணிய முன்னாள் கேப்டன்.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் சர்பராஸ் அகமது சக வீரருடன் மைதானத்தில் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: ‘நியாயமா பார்த்தா அவர்தான் உங்கள திட்டணும்’.. கிரவுண்டில் ‘காமெடி’ பண்ணிய முன்னாள் கேப்டன்.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி பர்மிங்காம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

ENG vs PAK: Shadab and Sarfaraz engage in verbal altercation

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 331 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் ஆசாம் 158 ரன்கள் அடித்து அசத்தினார். அதேபோல் தொடக்க ஆட்டக்காரர் இமாம்-உல்-ஹக் அரைசதம் (56 ரன்கள்) எடுத்திருந்தார்.

ENG vs PAK: Shadab and Sarfaraz engage in verbal altercation

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை பிரைடன் கார்ஸ் 5 விக்கெட்டுகளும், சாகிப் மஹ்மூத் 3 விக்கெட்டுகளும், மத்தேயு பார்கின்சன் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனை அடுத்து 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப் சால்ட் மற்றும் டேவிட் மாலன் களமிறங்கினர். இதில் டேவிட் மாலன் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து வந்த ஜாக் கிராலியுடன் ஜோடி சேர்ந்த பிலிப் சால்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது ஹரிஸ் ரவூப் வீசிய ஓவரில் பிலிப் சால்ட் (37 ரன்கள்) அவுட்டாக, அடுத்த களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸ் அதிடியாக ஆடி 102 ரன்கள் குவித்து அவுட்டானர். இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 32 ரன்களிலும், ஜான் சிம்ப்சன் 3 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால் பாகிஸ்தான் பக்கம் மெதுவாக ஆட்டம் திரும்பியது.

இந்த சமயத்தில் களமிறங்கிய லூயிஸ் கிரிகோரி (77 ரன்கள்) ஆரம்பம் முதலே அதிரடி காட்ட ஆரம்பித்தார். இதனால் 48 ஓவர்களில் 332 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பராஸ் அகமது, சக வீரர் சதாப் கானை திட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானுக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக சர்பராஸ் அகமது விக்கெட் கீப்பிங் செய்தார். அப்போது போட்டியின் 45-வது ஓவரை பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ரவூப் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை இங்கிலாந்து பேட்ஸ்மேன் லூயிஸ் கிரிகோரி எதிர்கொண்டார். எதிர்பாராத விதமாக பந்து பேட்டின் நுனியில் பட்டு அவருக்கு அருகிலேயே மேலே பறந்தது.

ஆனால் இதை விக்கெட் கீப்பிங் செய்துகொண்டிருந்த சர்பராஸ் அகமது கேட்ச் பிடிக்க முயலவில்லை. உடனே சதாப் கான் டாவ் அடித்து கேட்ச் பிடித்தார். இதனை அடுத்து அவர் சர்பராஸ் அகமதுவை பார்த்து ஏதோ சொல்ல, அதற்கு சர்பராஸ் அகமது ‘நீதான் அந்த பந்தை பிடிக்க வேண்டும்’ என்பது போல சதாப் கானை திட்டினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், பேட்ஸ்மேனுக்கு அருகில் பறந்த பந்தை நியாயப்படி விக்கெட் கீப்பர்தான் பிடித்திருக்க வேண்டும். ஆனால் கேட்ச் பிடிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருந்துவிட்டு, டைவ் அடித்து கேட்ச் பிடித்த வீரரை சர்பராஸ் அகமது எப்படி திட்டலாம்? என ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்