VIDEO: ‘முகத்துல அப்படியொரு ஆக்ரோஷம்’!.. இதுக்கு முன்னாடி யாரும் இப்படியொரு சம்பவத்தை பண்ணது இல்ல.. மிரண்டுபோன இங்கிலாந்து..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சர்துல் தாகூர் அரைசதம் அடித்து அசத்தினார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று (02.09.2021) நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி தொடக்க ஆட்டகாரர்களாக ரோஹித் ஷர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். இதில் இருவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

இதனை அடுத்து வந்த புஜாராவும் 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் 10 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். ஆனாலும் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்த ரஹானே (14 ரன்கள்) மற்றும் ரிஷப் பந்த் ( 9 ரன்கள்) அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால் 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இந்தியா பறிகொடுத்தது.

இந்த இக்கட்டான சமயத்தில் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் களமிறங்கினார். இவர் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்சர், பவுண்டரிகளை பறக்கவிட்டார். இதனை எதிர்பார்க்காத இங்கிலாந்து அணி, சர்துல் தாகூரின் ஆட்டத்தைப் பார்த்து மிரண்டு போனது. 8-வது வீரராக களமிறங்கி 57 ரன்கள் (7 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்து அசத்தினார்.

இதன்மூலம் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை ஷர்துல் தாகூர் படைத்துள்ளார். இதனை அடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை இந்திய அணி எடுத்தது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்