‘ப்ளேயிங் 11-ல் மிஸ்ஸான பெயர்’.. ஏன் அவர் விளையாடல..? முதல் போட்டியிலேயே ‘ஷாக்’ கொடுத்த இந்தியா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முன்னதாக இந்திய வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் இங்கிலாந்து எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் இளம் வீரர் சுப்மன் கில்லும் காயத்தால் வெளியேறியுள்ளார். இப்படி அடுத்தடுத்து வீரர்கள் காயத்தால் வெளியேறியது இந்திய அணிக்கு நெருக்கடியை கொடுத்தது. இதனால் பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் மாற்று வீரர்களாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இன்று (04.08.2021) இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் முகமது ஷமியுடன் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷர்துல் தாகூர் மற்றும் முகமது சிராஜ் இடம்பெற்றுள்ளனர். ஆனால் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இடம்பெறவில்லை. இதனால் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனை விமர்சித்து சமூக வலைதளங்களில் ‘No Ashwin’ என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

பொதுவாக இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்