VIDEO: ‘கண்ணாலே சிக்னல்’.. எப்படி கோலி இதை முன்னாடியே கணிச்சாரு..? ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விக்கெட் எடுக்க உள்ளதை விராட் கோலி முன்பே கணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மட்டுமே 64 ரன்கள் எடுத்தார். இந்திய அணியைப் பொறுத்தவரை பும்ரா 4 விக்கெட்டுகளும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இதுவரை 4 விக்கெட் வித்தியாசத்தில் 125 ரன்களை இந்தியா எடுத்துள்ளது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 57 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 4 ரன்னிலும், ரஹானே 5 ரன்னிலும் அவுட்டாகினார். அதேபோல் கேப்டன் விராட் கோலி, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்து இன்னிங்ஸின் போது, விக்கெட் ஒன்றை கேப்டன் விராட் கோலி முன்பே கணித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்போட்டியின் 54-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசினார். அப்போது இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர் பேட்டிங் செய்துகொண்டிருந்தார்.

அந்த ஓவரின் முதல் 4 பந்துகளை பும்ரா சிறப்பாக வீசினார். இதனை அடுத்து 5 பந்தை பும்ரா வீச தயாராகும் போது, கேப்டன் விராட் கோலி, இந்த பந்தில் பட்லர் அவுட்டாகி விடுவார் என்பது போல விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை அலெர்ட் செய்தார். அதேபோல் பும்ரா வீசிய 5-வது பந்தில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து பட்லர் அவுட்டாகினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், எப்படி கோலி முன்பே கணித்தார்? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்