‘நீங்க அப்படி பண்ணது ரொம்ப தப்பு’.. இந்திய ‘ஸ்டார்’ ப்ளேயருக்கு அபராதம்.. ஐசிசி எடுத்த அதிரடி ஆக்‌ஷன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 290 ரன்கள் எடுத்து 99 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனை அடுத்து நேற்றைய 4-ம் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 466 ரன்களை குவித்தது. இதில் ரோஹித் ஷர்மா சதம் (127 ரன்கள்) அடித்து அசத்தினார். இதனால் 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில் இப்போட்டியில் அம்பயரிடம் விதிகளை மீறி நடந்துகொண்டதாக கே.எல்.ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய 34-வது ஓவரில் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவிடம் கே.எல்.ராகுல் கேட்ச் கொடுத்தார்.

ஆனால் முதலில் அம்பயர் இதை அவுட் இல்லை என மறுத்துவிட்டார். அதனால் இங்கிலாந்து அணி மூன்றாவது அம்பயரிடம் ரிவியூ கேட்டனர். அதில் கே.எல்.ராகுலின் பேட்டில் பந்து பட்டது தெளிவாக தெரிந்ததால், அம்பயர் அவுட் என அறிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த கே.எல்.ராகுல் அம்பயரைப் பார்த்து கோபமாக முணுமுணுத்துக் கொண்டே சென்றார். கே.எல்.ராகுல் இந்த செயல் ஐசிசி விதிகளுக்கு முரணனாது என்பதால், அவரது ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்