‘எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்தோம், ஆனா..!’.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (10.09.2021) மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்திய அணியின் பிசியோதெரஃபிஸ்ட் நிதின் படேலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

அதனால் அவருடன் தொடர்பில் இருந்த இந்திய வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே போட்டியை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், ‘பிசிசிஐ மற்றும் இசிபி இணைந்து மான்செஸ்டரில் நடைபெறவுள்ள 5-வது டெஸ்ட் போட்டியை நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்த கடைசி டெஸ்ட் போட்டியை நடத்த பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனாலும் இந்திய கிரிக்கெட் அணி உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், இந்த டெஸ்ட் போட்டியை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்தபின் இந்த போட்டியை நடத்த ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் அவர்கள் ஓவல் மைதானத்தில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்