‘உலகக்கோப்பையில் ஒரு மிகப் பெரிய டாஸ்க்’.. தயார் செய்த இங்கிலாந்து..! தகர்க்குமா இந்தியா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்தில் வரும் 30ம் தேதி தொடங்கும் உலகக்கோப்பையில் ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படும் ஸ்கோர் கார்டு அட்டைகள் 500 ரன் வரை எண்கள் கொண்டதாக அச்சடிக்கப்பட்டு வருகின்றன.

பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டு வரும் ஆடுகளத்தால், ஒரு இன்னிங்ஸில் சராசரியாக 350 ரன்கள் வரையும், அதிகபட்சமாக 500 ரன்கள் வரையும் ஒரு அணியால் அடிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இதற்காகவே 500 ரன் வரை எண்கள் கொண்ட ஸ்கோர் கார்டு அட்டைகள் அச்சடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றிப் பேசிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரி டாம் ஹாரிஸன், “இந்த முறை ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் என்ற இலக்கு நிச்சயமாக எட்டப்படும். இந்த உலகக்கோப்பை ரசிகர்களுக்கு மிகச் சிறந்த விருந்தாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிரிஸ்டலில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

ICCWORLDCUP2019, ENGLAND, INDIA, 500RUNS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்