‘இல்ல அது பொய்’!.. கடைசி டெஸ்ட் மேட்சை ரத்து செஞ்சதுக்கு காரணம் இதுதானா..? இங்கிலாந்து கிரிக்கெட் CEO விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சிஇஓ விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று (10.09.2021) மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்திய அணியின் பிசியோ நிதின் படேலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. ஆனாலும் மீண்டும் ஒரு சோதனை மேற்கொள்ள வேண்டி இருந்ததால், போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் இந்திய கிரிக்கெட் வாரியமும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் தீவிர ஆலோசனை மேற்கொண்டது. இதனை அடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியை மீண்டும் எப்போது நடத்துவது என ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வரும் செப்டம்பர் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளன. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. ஆனால் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 14-ம் தேதி முடிவடைய இருந்தது. ஒருவேளை கடைசி டெஸ்ட் போட்டியின்போது வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டால், ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இந்தியா விளையாட மறுத்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) டாம் ஹாரிஸன், இந்த சர்ச்சை குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘இந்த டெஸ்ட் போட்டியை மீண்டும் எங்களால் நடத்த முடியும் என்று நம்புகிறோம். ஆனால் அப்போட்டி, இந்த டெஸ்ட் தொடரின் தொடர்ச்சியாக இருக்காது. ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டியாக விளையாடப்படும்.
ஐபிஎல் தொடர் காரணமாகதான் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது என கூறுவது பொய்யானது. எங்களுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இடையே நெருக்கமான நட்பு உள்ளது. நாங்கள் இந்த சிக்கலில் இருந்து மீண்டு, முன்பை விட வலிமையாக திரும்ப வருவோம்’ என டாம் ஹாரிஸன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இதை யாருமே எதிர்பார்க்கல’!.. கடைசி டெஸ்ட் நடக்குமா..? நடக்காதா..? இந்திய அணியால் ஏற்பட்ட சிக்கல்..!
- பறிபோகிறதா தோனியின் 'ஆலோசகர்' பதவி?.. பிசிசிஐ-க்கு பறந்த அவசர புகார்!.. 'ஏன்யா இப்படி பண்றீங்க'!?.. நொறுங்கிப் போன ரசிகர்கள்!
- 'சாஹல் கிட்ட அப்படி என்ன குறை கண்டுபுடிச்சீங்க'?.. 'எதுக்காக அவர டி20 உலகக்கோப்பைல நிராகரிச்சீங்க'?.. மௌனம் கலைத்த பிசிசிஐ!
- இதுக்காக தான் தோனியை ஆலோசகராக போட்டிருப்பாங்க.. கரெக்ட்டா வந்து கருத்து சொன்ன கம்பீர்..!
- அடேங்கப்பா..! அஸ்வினை டி20 உலகக்கோப்பைக்கு செலக்ட் பண்ணதுக்கு காரணம் இதுதானா.. மாஸ்டர் ப்ளான் போட்டிருக்கும் இந்தியா..!
- ஏன் ‘நடராஜன்’ டி20 உலகக்கோப்பை அணியில் செலக்ட் ஆகல..? எல்லார் மண்டைக்குள்ளையும் ஓடிட்டு இருந்த ஒரே கேள்வி.. ஒருவழியாக ‘காரணத்தை’ சொன்ன தேர்வுக்குழு தலைவர்..!
- பல வருட காத்திருப்பின் வலி..! அஸ்வின் வீட்டுச் ‘சுவரில்’ எழுதிய வாசகம்.. ரசிகர்களை உருக வைத்த பதிவு..!
- துபாயில் நடந்த பேச்சு வார்த்தை.. அப்போ ‘தோனி’ போட்ட ஒரு கண்டிஷன்.. பிசிசிஐ செயலாளர் சொன்ன சீக்ரெட்..!
- பிசிசிஐ போட்ட ஒரே ஒரு ட்வீட்.. மின்னல் வேகத்தில் டிரெண்டாகும் கௌதம் கம்பீர்.. என்ன காரணம்..?
- இந்த வருசத்தோட மிகப்பெரிய ‘சர்ப்ரைஸ்’ இதுதான்.. டி20 உலகக்கோப்பையில் ‘தல’ தோனியை பார்க்க போறீங்க.. ‘ஆனா ஒரு சின்ன ட்விஸ்ட்’.. இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ..!