மேட்ச் தொடங்குறதுக்கு முன்னாடி துபாயில் இப்படியொரு சம்பவம் நடந்ததா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Advertising
>
Advertising

துபாய் (Dubai) மைதானத்தில் நேற்றிரவு டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 85 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 18.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதுவரை டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது கிடையாது. இந்த சூழலில் இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், முதல்முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வென்று ஆஸ்திரேலிய அணி வரலாறு படைத்துள்ளது.

இதில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஸ் 77 ரன்களும், டேவிட் வார்னர் 53 ரன்களும் எடுத்தனர். மேலும் இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது மிட்செல் மார்ஸுக்கும், தொடர் நாயகன் விருது டேவிட் வார்னருக்கும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக துபாயில் நிலநடுக்கம் (Earthquake) உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு ஈரானில் நேற்று மாலை ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் அண்டை நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

அதில் துபாயில் உள்ள ஜுமைரா லேக் டவர்ஸ், துபாய் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பார்க், டிஸ்கவரி காரடன்ஸ் ஆகிய பகுதிகளில் சில நிமிடம் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் ஷார்ஜா மற்றும் அபுதாபியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

T20WORLDCUP, EARTHQUAKE, DUBAI, NZVAUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்