T20 WorldCup : இந்தியா Vs பாகிஸ்தான் போட்டிக்காக.. களத்தில் இறங்கிய பிரபல 'ஹாலிவுட்' நடிகர்!!..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி 20 உலக கோப்பைத் தொடர், தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

T20 WorldCup : இந்தியா Vs பாகிஸ்தான் போட்டிக்காக.. களத்தில் இறங்கிய பிரபல 'ஹாலிவுட்' நடிகர்!!..
Advertising
>
Advertising

Also Read | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு கூடுதலாக 5 லட்ச ரூபாய் நிவாரணம்.. முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!

சூப்பர் 12 பிரிவில் தகுதி பெறுவதற்கான போட்டிகள் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், மறுபக்கம் ஏற்கனவே சூப்பர் 12 பிரிவிக்கு தகுதி பெற்ற அணிகள் பயிற்சி ஆட்டங்களில் மமோதி வருகிறது.

இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்றிருந்தது. இதற்கு அடுத்தபடியாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம், மழை காரணமாக ரத்தாகி உள்ளது.

Dwayne Johnson about india vs pakistan t20 wc match in a new video

தொடர்ந்து, டி 20 உலக கோப்பைத் தொடரில் தங்களின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்தியா சந்திக்க உள்ளது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து டி 20 உலக கோப்பை தொடர் நடைபெற்றிருந்தது. இதன் லீக் தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. அது மட்டுமில்லாமல், லீக் சுற்றுடன் வெளியேறிய இந்திய அணி, ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் அளித்திருந்தது.

அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பைத் தொடரில், இந்திய அணி தங்களின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை அக்டோபர் 23 ஆம் தேதியன்று சந்திக்க உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே, இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமில்லாமல், கிரிக்கெட் உலகிலேயே அனல் பறக்கும் போட்டியாக தான் பார்க்கப்படும்.

அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போதே இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

இந்த நிலையில், ஹாலிவுட் நடிகரும், WWE வீரருமான 'தி ராக்' என அழைக்கப்படும் டுவைன் ஜான்சன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதவுள்ள டி 20 உலக கோப்பை போட்டி பற்றி பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் பேசும் டுவைன் ஜான்சன், "மிகப் பெரிய போட்டியாளர்கள் மோதும் போதும் இந்த உலகமே அசையாமல் நிற்கும். இது கிரிக்கெட் போட்டியை விட மேலானதாகும். இது இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான நேரம்" என தெரிவித்துள்ளார். கிரிக்கெட் போட்டி குறித்து ஹாலிவுட் நடிகர் பேசியுள்ள வீடியோ, ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read | "நல்லா தான் ஆடிட்டு இருந்தாரு, திடீர்ன்னு".. ஒரே நொடியில் நடந்த துயரம்.. அதிர்ச்சி சம்பவம்!!

CRICKET, T20 WORLD CUP, DWAYNE JOHNSON, INDIA VS PAKISTAN, T20 WORLD CUP MATCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்