Video : "என்னோட 'சிஎஸ்கே' டீம விட்டு போறேன்... இத மட்டும் தயவு செஞ்சு பண்ணுங்க,.." 'உருக்கமான' வேண்டுகோளுடன் கிளம்பிய 'பிராவோ'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் மிக மோசமாக ஆடி வரும் நிலையில், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

லீக் சுற்றில் மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட மற்ற போட்டிகளின் முடிவுகளை வைத்தே சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பது தெரிய வரும். இந்நிலையில், சென்னை அணியின் ஆல் ரவுண்டரான டுவைன் பிராவோ மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பிராவோவுக்கு காயமடைந்திருந்த நிலையில், போட்டி முடிவடைய சில ஓவர்கள் இருக்கும் போதே வெளியேறினார். தொடர்ந்து அடுத்த போட்டியிலும் களமிறங்காத நிலையில், அவர் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகுவதாக அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.





 

இதனைத் தொடர்ந்து, பிராவோ சிஎஸ்கே ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்து வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய பிராவோ, 'எனது அணியான 'சிஎஸ்கே'வை விட்டு நான் விலகுவது வருத்தமாக உள்ளது. சிஎஸ்கே ரசிகர்கள் தொடர்ந்து அணிக்கு ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.



 

மேலும், 'இந்த சீசன் நாங்கள் எதிர்பார்த்தது போல அமையவில்லை. நம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவும் அமையவில்லை. நாங்கள் எங்களது சிறப்பான பங்களிப்பை அளித்தோம். ஆனாலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை' என உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
 

 

சென்னை அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், அதன் கீழ் ரசிகர்கள் பலர் உருக்கத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவை அணிக்கு ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது பிராவோவும் காயம் காரணமாக விலகியுள்ளது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்