புஷ்பா படத்தின் ஸ்ரீவள்ளி ஸ்டெப்.. 'விக்கெட்' எடுத்ததும்.. மைதானத்திலேயே ஆடிய வெளிநாட்டு வீரர்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

புஷ்பா படத்தின் ஸ்ரீவள்ளி பாடலுக்கு, மைதானத்திலேயே பிரபல வெளிநாட்டு வீரர் நடனம் ஆடிய வீடியோ, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகியிருந்த திரைப்படம் 'புஷ்பா'. திரையிட்ட அனைத்து இடங்களிலும் படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், அதிக வசூலையும் அள்ளிக் குவித்தது.

புஷ்பா படத்தில், அல்லு அர்ஜுனின் வித்தியாசமான நடிப்பு எந்த அளவுக்கு பேசப்பட்டதோ, அந்த அளவுக்கு படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்கள் ஆகியனவும், நேஷனல் லெவலுக்கு வைரலானது.

டான்ஸ் ஸ்டெப் ரொம்ப பிரபலம்

அதிலும் குறிப்பாக, பாடல்களில் வரும் நடன அசைவுகளுக்கு, பல சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் நடனமாடி, வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் கிரிக்கெட் வீரர்களான டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா, ஜடேஜா உள்ளிட்டோர், புஷ்பா படம் தொடர்பான வசனங்கள் மற்றும் பாடல்கள் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இந்த லிஸ்ட்டில் தற்போது ஒரு பிரபல வெளிநாட்டு கிரிக்கெட் வீரரும் இணைந்துள்ளார்.

மைதானத்தில் டான்ஸ்

இவர் ஒரு படி மேலே சென்று, கிரிக்கெட் போட்டிக்கு நடுவே புஷ்பா படத்தின் ஸ்டெப் ஒன்றைப் போட்டுள்ளார். இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது போல, பங்களாதேஷ் நாட்டில் தற்போது பங்களாதேஷ் பிரீமியர் லீக் என்னும் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில், Comilla Victorians மற்றும் Fortune Barishal ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. அப்போது, Comilla அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த சமயத்தில், 18 ஆவது ஓவரை வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ வீசினார்.

மீண்டும் வைரல்

மெஹிதுல் இஸ்லாம் என்பவரின் விக்கெட்டை அதே ஓவரில் பிராவோ வீழ்த்த, மறுநொடியே புஷ்பா படத்தின் அல்லு அர்ஜுன் ஸ்டெப் ஒன்றை சில நொடிகள் ஆடிக் காட்டினார் பிராவோ. மிகச் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தும் ஆல் ரவுண்டர் பிராவோ, ரசிகர்களை பொழுது போக்கவும் தவறுவதில்லை.



விக்கெட் அல்லது ரன்கள் அடிக்கும் போது, மிக வித்தியாசமான நடனம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பிராவோ, தற்போது புஷ்பா பாடலில் நடனத்தை போட்டு மீண்டும் வைரலாகியுள்ளார்.

 

அது மட்டுமில்லாமல், போட்டிக்கு முன்பாகவே, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், 'ஸ்ரீவள்ளி' பாடலுக்கு நடனமாடி, வீடியோ ஒன்றை பிராவோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

DWAYNE BRAVO, PUSHPA, ALLU ARJUN, SRIVALLI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்