ஐபிஎல் மெகா ஏலம் : 'சிஎஸ்கே' பிளேயருக்கு செம டிமாண்ட் இருக்க போகுது.. 11 கோடி வர விலை போவாரு.. முன்னாள் வீரர் கருத்து

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முன்னாள் சிஎஸ்கே வீரரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

செய்யாத குற்றத்திற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை.. 14 ஆண்டுகள் கழித்து தெரிய வந்த 'உண்மை'.. "அடப்பாவி, எல்லாம் பண்ணது நீ தானா?"

15 ஆவது ஐபிஎல் தொடர், இந்தியாவில் வைத்து மார்ச் மாத இறுதியில் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த முறை, 8 அணிகள் மட்டுமே ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த நிலையில், இந்த முறை, அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு அணிகள், புதிதாக கலந்து கொள்ளவுள்ளது.

புதிதாக வந்த இரண்டு அணிகளும், தலா 3 வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், ஏற்கனவே உள்ள 8 அணிகளும், 2 முதல் 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

வீரர்கள் பட்டியல்

அனைத்து அணிகளும், மீதமுள்ள வீரர்களை, வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் தேர்ந்தெடுக்கவுள்ளது. இதற்காக, 590 வீரர்கள் மற்றும் அவர்களின் அடிப்படை தொகை பற்றிய பட்டியலும், சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

முன்னாள் வீரர்கள் கருத்து

இதில் இடம்பெற்றுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பலரை அணியில் இணைத்துக் கொள்வதற்கான திட்டத்தில் அனைத்து அணிகளும் தீவிரமாக இறங்கியுள்ளது. ஐபிஎல் ஏலம் நெருங்கி வருவதால், எந்தெந்த அணிகள், எந்தெந்த வீரர்களை வாங்க விருப்பம் காட்டுவார்கள் என்பது பற்றியும், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஷ்ரேயாஸ் ஐயரின் அனுபவம்

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக், ஏல பட்டியலில் உள்ள சில வீரர்களை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். 'ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு நிலையான ஆட்டக்காரர். அதே போல அவருக்கு ஐபிஎல் தொடரில், கேப்டன்சி அனுபவமும் உள்ளது. பஞ்சாப் மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகள், அவரை எடுக்க முயற்சிக்கும் என நான் நினைக்கிறேன். அதே போல, கொல்கத்தா அணியும் ஒரு வேளை முயற்சிக்கலாம். 4 கோடி ரூபாய்க்கு ஷ்ரேயாஸ் ஐயர் விலை போவார் என தோன்றுகிறது

முகமது ஷமி

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, 4 முதல் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் போகலாம். பத்து அணிகளும், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை எடுக்க, கடும் போட்டி போடும். இதனால், அவர் 5 கோடிக்கும் அதிகமாக போவார் என தோன்றுகிறது. டேவிட் வார்னரை பொறுத்தவரையில், 4 கோடிக்கு அதிகமாக போவது போல தோன்றவில்லை.

ரவிச்சந்திரன் அஸ்வின்

இந்திய அணியின் மதிப்புள்ள வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், மிக சிக்கனமாக பந்து வீசக் கூடியவர். கடைசி நேரத்தில், பேட்டிங்கிலும் அவர் கை கொடுப்பார். அதனால், அவரது மதிப்பு, 7 கோடி வரை செல்லும் என்றே தெரிகிறது' என ஹாக் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே வீரர்

தொடர்ந்து, கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக ஆடிய டுபிளஸ்ஸிஸ் பற்றி பேசிய பிராட் ஹாக், 'இந்த ஏலத்தில், அதிகம் தேடப்படும் வீரராக டுபிளஸ்ஸிஸ் இருப்பார். இதற்கு மிக முக்கிய காரணம், அவரிடமுள்ள தலைமை பண்புகள். பெங்களூர், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள், அவரை கேப்டனாக்கும் நோக்கில், அணியில் இணைக்கலாம். இல்லை என்றால், மீண்டும் சிஎஸ்கே அணி கூட அவரை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

போட்டி போடும்

கேப்டன்சி மட்டுமில்லாமல், தொடடக்க வீரராகவும் சிறப்பாக ஆடக் கூடியவர் டுபிளஸ்ஸிஸ். இப்படி அவரிடம் பல திறமைகள் இருக்கும் என்பதால், கடந்த ஆண்டில் சிறப்பாக ஆடியதையும் வைத்து, 7 கோடி வரை போகலாம். ஒரு வேளை, அவருக்கு 11 கோடி வரை விலை ஏறவும் வாய்ப்புள்ளது' என பிராட் ஹாக் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் சிஎஸ்கே?

கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் ஆடிய டுபிளஸ்ஸிஸ், 633 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில், இரண்டாம் இடம் பிடித்திருந்தார். சென்னை அணி கோப்பையை வெல்லவும், அவர் முக்கிய காரணமாக இருந்த நிலையில், மீண்டும் சிஎஸ்கே அணியே அவரை எடுக்க, ஏலத்தில் போட்டி போடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

"அவரு எல்லாம் ஒரு ஆல் ரவுண்டரா?".. இந்திய வீரரை கிழித்து தொங்க விட்ட முன்னாள் வீரர்

DUPLESSIS, PLAYER, IPL AUCTION, BRAD HOGG, CSK, சிஎஸ்கே, ஐபிஎல் மெகா ஏலம், பிராட் ஹாக்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்