‘பவுலிங் பண்ணவே இல்ல’!.. பேசாம ‘பாண்ட்யாவை’ தூக்கிட்டு அவரை விளையாட வைங்க.. முன்னாள் வீரர் அதிரடி கருத்து..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக யாரை களமிறக்க வேண்டும் என அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

‘பவுலிங் பண்ணவே இல்ல’!.. பேசாம ‘பாண்ட்யாவை’ தூக்கிட்டு அவரை விளையாட வைங்க.. முன்னாள் வீரர் அதிரடி கருத்து..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் முன்னணி அணிகள் மோதவுள்ள முக்கிய போட்டிகள் தொடங்கவுள்ளன. அதில் வரும் 24-ம் தேதி இந்தியா தனது முதலில் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

Drop Hardik Pandya and play Jadeja, says Ajit Agarkar

இதற்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இன்றைய (20.10.2021) போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.

Drop Hardik Pandya and play Jadeja, says Ajit Agarkar

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு (Hardik Pandya) பதிலாக வேறொரு வீரரை களமிறக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். அவர் விளையாடினால் வருண் சக்கரவர்த்தி, ராகுல் சஹாருடன் சேர்த்து மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள். இது அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.

வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர் உள்ளனர். என்னைப் பொறுத்தவரை பேட்டிங்கிற்கு சாதமாக இருக்கும் மைதனாத்தில் ஆறாவதாக ஒரு பேட்ஸ்மேன் தேவையில்லை. ஆனால் ஜடேஜா பந்து வீச்சில் மட்டுமின்றி, பேட்டிங்கிலும் ஃபினிஷர் ரோலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால் பாண்ட்யாவுக்கு பதிலாக அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்’ என அஜித் அகார்கர் கூறியுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்டாவுக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், சில காலம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். இதனை அடுத்து மீண்டும் அணியில் இடம் பிடித்தாலும், பேட்டிங் மட்டுமே செய்து வருகிறார். ஆனால் பவுலிங் செய்யாதது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுவதாக முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் ஹர்திக் பாண்ட்யா பவுலிங் செய்யவில்லை. மேலும் பேட்டிங்கிலும் பெரிய அளவில் ரன்களை அவர் எடுக்கவில்லை. அதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்