‘என்சிஏ மூலம்தான் அணிக்கு வரணும்’!.. ‘பும்ராவை திருப்பி அனுப்பிய டிராவிட்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஎன்சிஏவில் உடல் தகுதித் தேர்வு செய்யாததால் பும்ராவை ராகுல் டிராவிட் திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை மேற்கொண்டு சில நாட்கள் ஓய்வில் இருந்தார். உடல்நலம் குணமடைந்ததை அடுத்து, பும்ரா தனது தேர்வு மற்றும் பயிற்சிக்கு தனியார் மருத்துவர்களையும், பயிற்சியாளர்களையும் நியமித்தார்.
பிசிசிஐ விதிப்படி இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) பயிற்சி பெற்று, உடல் தகுதித் தேர்வான பின் அணிக்கு திரும்ப வேண்டும். தற்போது என்சிஏவுக்கு தலைவராக ராகுல் டிராவிட் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை பும்ராவுக்கு உடல்தகுதி தேர்வு செய்ய ராகுல் டிராவிட் மற்றும் உடல் தகுதித் தேர்வாளர் ஆஷிஸ் கவுசிக் வந்துள்ளனர். ஆனால் உடற்தகுதி தேர்வு மற்றும் பயிற்சியில் பும்ரா ஆர்வம் காட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் விசாகப்பட்டிணத்தில் உள்ள இந்திய அணியோடு பும்ரா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டிராவிட் பும்ராவுக்கு உடல்தகுதித் தேர்வு நடத்த முடியாது என திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக தெரிவித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி,‘பும்ரா-டிராவிட் விவகாரம் குறித்து எனக்கு தெரியாது. ஆனால் இந்திய வீரர்கள் அனைவரும் என்சிஏவில் பயிற்சி பெற்று, உடல் தகுதியை நிரூபித்த பின்னரே அணிக்கு திரும்ப வேண்டும். வருடம் முழுவதும் இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் விளையாட உள்ளனர். பும்ரா கேட்டிருந்தால் என்சிஏ உடல்தகுதி நிபுணர்களை அனுப்பி வைத்திருப்போம். என்சிஏவில் சிறந்த பயிற்சியாளர்களும், உடல்தகுதி நிபுணர்களும் உள்ளனர்’ என தெரிவித்தார்.
மேலும்,‘டிராவிட் மீது அதிக நம்பிக்கை உள்ளது. மிகச்சிறந்த வீரர் அவர். அவரது பங்களிப்பும், அர்ப்பணிப்பும் சிறப்பாக இருக்கும். டிராவிட் தலைமையில் என்சிஏ சிறப்பாக நடைபெறும்’ என கங்குலி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எப்படியும் என் பவுலிங்க நீங்க சந்திச்சே ஆகணும்’!.. பிரபல வீரருக்கு கலக்கல் பதிலளித்த பும்ரா..!
- திடீரென 'கேப்டனை' அறிவித்த பிரபல அணி... மத்த டீம் 'கேப்டன்'களோட நிலை என்ன?
- மொத்தம் 85 கோடி... 'டாப் 10' வீரர்கள் பட்டியலில்... இடம்பிடித்த ஒரே 'இந்தியர்' இவர்தான்!
- 10 கோடி, 15 கோடி... எக்கச்சக்கமாக 'வீரர்களின்' விலையை ஏற்றிவிட்டு... எஸ்கேப் ஆன அணி!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- பானிபூரி வித்து... பட்ட 'கஷ்டமெல்லாம்' வீணாகல... கோடிகளில் 'விலைபோன' 17 வயது வீரர்!
- 'விலை' போகாத வீரர்களை... ஏலக்கடைசியில்... கோடிகளை 'கொட்டிக்கொடுத்து' எடுத்த அணிகள்!
- VIDEO: ‘தலைவன் தோனி’க்கு.. ‘என்ன வேணும்னு எங்களுக்கு தெரியும்’!.. சிஎஸ்கே சிஇஓ-வின் சூப்பர் பதில்..!
- இந்தவாட்டி 'மிஸ்' பண்ணக்கூடாது... தமிழக வீரரை 'ஸ்கெட்ச்' போட்டுத்தூக்கிய... பிரபல அணி!
- ‘ஐபிஎல் வரலாற்றிலேயே’.. ‘அதிக விலைக்கு ஏலம் போன வீரர்’!.. ‘மொத்த டீமையும் திரும்பி பாக்க வச்ச ஒத்த டீம்’..!