Virat Kohli : கோலி பேட்டிங் பண்ணும்போது UPI பணப்பரிவர்த்தனையில் ஏற்பட்ட பரபரப்பு மாற்றம்.! நெட்டிசன்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆன விஷயம்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி குறித்து தற்போது வரை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள்.

Advertising
>
Advertising

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி அன்று சூப்பர் 12 சுற்று ஆரம்பமாகி இருந்தது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களின் முதல் போட்டியில் பாகிஸ்தான அணியை சந்தித்து இருந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ரோஹித், பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தார். அதன்படி ஆடிய பாகிஸ்தானின் தொடக்க வீரர்களான பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோரின் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் எடுத்து அசத்தி இருந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறினாலும் இப்திகர் மற்றும் மசூத் ஆகியோர் அரை சதம் அடித்து ஓரளவுக்கு அணியின் ஸ்கோரை நிலை நிறுத்தி இருந்தனர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியும் ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, ஓரளவு தடுமாற்றம் கண்டது. பின்னர் ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி ஆகியோர் இணைந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அதுமட்டுமில்லாமல் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்ற இந்திய அணி, பட்டையைக் கிளப்பி இருந்தது. குறிப்பாக விராட் கோலியும் கடைசிவரை பக்கபலமாக இருந்து அணியை வெற்றி பாதைக்கு எடுத்துச் சென்றார்.

இதில் அட்டகாசமாக விளையாடிய விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார், ஹர்திக் பாண்ட்யா 37 பந்துகளில் 40 ரன்களை  குவித்தார். இவர்கள் இருவரும் 100 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்ததை அடுத்து, கடைசி நேரத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனிடையே விராட் கோலி இப்படி ஆட்டத்தை த்ரில்லாக மாற்றி ஆடிய நேரத்தில், ஆன்லைனில் UPI பணப்பரிவர்த்தனைகளின் கிராஃபானது வேற லேவலில் மாறி இருக்கிறது.

அதன்படி காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை, தீபாவளிக்கான ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகமாக நடந்திருக்கின்றன. இதேபோல் மதியம் 2 - 3 மணியில் பாகிஸ்தான் அணி பேட்டிங் ஆடியபோது அவை குறைந்துள்ளன. அதன் பின்னர் 4 மணி அளவில் இந்தியா பேட்டிங் செய்யத் தொடங்கியபோது UPI பணப்பரிவர்த்தனை இன்னும் குறையத் தொடங்கியது. கிட்டத்தட்ட கோலி ஆடும்போது வெகுவாக குறைந்துவிட்டது. இந்த டேட்டாவை NPCI வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆக, அந்த அளவுக்கு கோலியின் ஆட்டம் பரபரப்பான ஆட்டம் போய்க்கொண்டிருந்ததால் இப்படி UPI பணப்பரிவர்த்தனை விகிதம் டவுன் ஆகியிருக்கலாம் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

VIRAT KOHLI, INDVSPAK, T20WORLDCUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்