'ஏங்க... உங்க பேரு லிஸ்ட்லயே இல்லைங்க'!.. 'எங்கிருந்தோ வந்து... எல்லாத்தையும் சல்லி சல்லியா நொறுக்கிட்டாரு பா!'.. இந்திய வீரர்களை அலறிவிட்டு.. சம்பவம் செய்தது எப்படி?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னையில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் ஒற்றை நபராக இந்திய அணியை இளம் வீரர் ஒருவர் மொத்தமாக காலி செய்து உள்ளார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி மிகவும் வலிமையான நிலையில் உள்ளது. இந்தியாவிற்கு எதிராக முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டை இழந்து இந்தியா போராடி வருகிறது. இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 235 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. பாலோ ஆனை தவிர்க்க இந்திய அணி 378 ரன்களுக்கும் அதிகமாக எடுக்க வேண்டும். அஸ்வின் மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் இருவரும் பாலோ ஆனை தவிர்க்க போராடி வருகிறார்கள். 

இந்த போட்டியில் சிறப்பாக ஆடி வந்த பண்ட் 91 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். புஜாரா அதேபோல் 73 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இன்னொரு பக்கம் கோலி 11 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ரஹானேவும் கேட்ச் கொடுத்து 1 ரன்னுக்கு அவுட் ஆனார். 

இந்திய அணியின் இந்த 4 முக்கியமான வீரர்களும் ஒரே மாதிரி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்கள். இவர்கள் நான்கு பேருமே டொமினிக் பெஸ் போட்ட சூழலில் அவுட் ஆனார்கள். இந்திய அணியை இன்று சின்னா பின்னம் செய்தது இவர்தான். 

இங்கிலாந்து அணியில் இவர் சர்ப்ரைஸ் எண்டரி கொடுத்துள்ளார். 23 வயதாகும் இந்த இளம் வீரர் வலது கை ஆப் பிரேக் பவுலர். இவரின் பவுலிங் சென்னை பிட்சில் நன்றாக எடுப்பட்டது. இதன் காரணமாக தற்போது எளிதாக இந்திய வீரர்களை வீழ்த்தி உள்ளார். 

இந்திய அணி ஆண்டர்சன், ஆர்ச்சரை எதிர்கொள்ள பிளான் போட்டது. ஆனால் டொமினிக் சம்பந்தமே இன்றி உள்ளே வந்து இந்திய அணியை சாய்த்து இருக்கிறார். இந்த திருப்பத்தை இந்திய அணி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. இந்த தொடரில் இந்திய அணிக்கு டொமினிக் கண்டிப்பாக சிம்ம சொப்பனமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்