'எனக்கு டி.வி. போடத் தெரியாது'.. 'பாப்பா ஓடி ஜெயிடுச்சு'னு சொன்னாங்க.. கள்ளகபடமின்றி பேசும் தாய்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை, தனது மகள் வென்றது கூட தெரியாமல் இருந்ததாக, தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துவின் தாய் கள்ளகபடமின்றி தெரிவித்துள்ளார்.

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோகாவில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 30 வயதான தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து  2 நிமிடம் 70 வினாடியில் கடந்து முதலிடத்தைப் பிடித்தார். இதன் மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை கோமதி மாரிமுத்து வென்று பெருமை தேடித் தந்துள்ளார்.

முதலில் தமிழக வீராங்கனை கோமதி  சற்று பின்தங்கி இருந்தார். பின்னர் தனது அபார ஓட்டத்தினால் சீன வீராங்கனை வாங் சுன்யு வை தோற்கடித்து முதலிடத்தைப் பிடித்தார். பின்னர் பேசிய கோமதி மாரிமுத்து 'நான் எல்லைக் கோட்டை முதலாவதாகக் கடந்து தங்கப்பதக்கம் வென்றுவிட்டேன் என்பதை என்னால் உணர முடியவில்லை. கடைசி 150 மீட்டர் தூரம் மிகவும் கடினமாக இருந்தது' என்று தெரிவித்தார்.

ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கத்தை வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்து தமிழகத்தைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் திருச்சி. ஏழ்மையான சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தால் 20 வயது முதலே தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். தற்போது பெங்களூருவில் வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். 

மேலும் 2013-ம் ஆண்டு புனேவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 7-வது இடத்தையும் 2015-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 4-வது இடத்தையும் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ல் கோமதியின் தந்தை புற்றுநோயால் இறக்க, அடுத்த சில மாதங்களிலேயே பயிற்சியாளர் காந்தியும் இறந்துப்போக அந்த சோதனைக் காலத்தை கடுமையாக போராடி வென்று இன்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 

இதுகுறித்து, கோமதியின் தாய் பேசுகையில், 'எனது மகள் ஜெயிச்சதே தனக்கு தெரியாமல் இருந்தது. எனக்கு டி.வி. போட்டு பார்க்க தெரியாது. அதனால் அவ ஓடுனத நான் பார்க்கல. உறவினர்களின் குழந்தைகள் சொன்னப் பிறகே எனது மகள் ஓடி ஜெயித்துவிட்டால் என்று தெரியும்' என கள்ளக்கபடமின்றி கூறியுள்ளார்.

ASIAN, ATHLETIC, CHAMPIONSHIP, GOLDMEDAL, GOMATHI, INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்