‘எல்லாம் ரெடி’!.. இந்தியாவில் இருந்து ‘ரெண்டே’ பேர் தான்.. கிரிக்கெட் ஜாம்பவானுடன் இங்கிலாந்துக்கு பறக்கும் தினேஷ் கார்த்திக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் 18-ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. ஐசிசி நடத்தும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ள. இந்த தொடரில் விளையாட உள்ள இந்திய வீரர்களின் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது.
மேலும் இதே அணியே அடுத்த நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. தற்போது மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி ஜூன் 2-ம் தேதி இங்கிலாந்து செல்ல உள்ளது. இதற்கான 25 வீரர்கள் கொண்ட இந்திய அணி தற்போது தயாராகி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து தொடரில் வர்ணனையாளர்களாக இருவரும் பங்கேற்க உள்ளனர்.
இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வர்ணனையாளர்கள் இங்கிலாந்தில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே போட்டியை வர்ணனை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் முன்னணி வர்ணனையாளர்கள் சிலர் இந்த வாய்ப்பை நிராகரித்தனர். அதனால் இந்தியாவில் இருந்து சுனில் கவாஸ்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இரண்டு பேர் மட்டுமே வர்ணனையாளர்களாக செல்ல உள்ளதாக Cricbuzz சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஓப்பனிங் ஆடுவதற்கு முக்கிய தகுதி 'இது' தான்'!.. கோலி அட்வைஸ்!.. ரோகித் கேம் ப்ளான்!.. ஷுப்மன் கில்லுக்கு மட்டும் தெரிந்த சீக்ரெட்!!
- 'பணத்தை செட்டில் பண்ணாத பிசிசிஐ'!.. வருடக் கணக்கில் வீரர்களுக்கு பிரச்சினை!.. அதிரவைக்கும் பின்னணி!
- ஐபிஎல் கேன்சல் ஆனது இந்திய அணிக்கு நல்லது!.. செம்ம வாய்ப்பு காத்திருக்கு!.. உண்மையை உடைத்த நியூசிலாந்து வீரர்!
- 'இந்த டீம் கண்டிப்பா டி20 உலகக் கோப்பை ஜெயிக்காது!.. அதுக்கு ஒரே காரணம் 'இவர்' தான்!.. அடித்து சொல்லும் ஆகாஷ் சோப்ரா'!!
- 'இதுவும் போச்சா'?.. 'டி20 உலகக் கோப்பை நடத்தலாமா? வேண்டாமா'?.. ஐசிசி அவசர மீட்டிங்!.. கடும் விரக்தியில் பிசிசிஐ!
- 'அந்த பையன் பெரிய லெவல்ல வருவாரு... தயவு செஞ்சு வாய்ப்பு கொடுங்க'!.. இளம் வீரருக்காக... கோலியிடம் கோரிக்கை வைத்த லக்ஷ்மண்!
- அவர் மட்டும் இல்லனா... இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் final-க்கே வந்திருக்காது!.. கோலி கண்டெடுத்த இளம் talent!
- 'அந்த நாளுக்காக... பல வருஷமா தவம் இருக்கோம்!.. இப்படி பண்ணிட்டீங்களே'!.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அறிவிப்பு!
- 'நம்ம பவுலிங் அட்டாக் 'இப்படி' இருந்தா தான்... நியூசிலாந்தை சுருட்ட முடியும்'!.. டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக நெஹ்ரா போட்ட ஸ்கெட்ச்!
- எப்படி விளையாடணும்?.. என்ன ரூல்ஸ்?.. எதுவுமே தெரியாம... டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை.. கேலி கூத்தாக்கும் ஐசிசி!.. கடும் விமர்சனம்!