ஐபிஎல் மூலம் ‘கோடிக்கணக்கில்’ அள்ளிய டிவி?.. ஆனாலும் ஒரு சின்ன ‘வருத்தம்’ இருக்குதாம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடரை ஒளிபரப்பிய தொலைக்காட்சி பெரிய அளவில் வருமானம் ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

13-வது சீசன் ஐபிஎல் தொடர் கடுமையான கட்டுப்பாடுகளுக்கும் இடையே ஐக்கிய அமீரகத்தில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. கொரோனாவால் பல நிறுவனங்கள் வருவாய் இழப்பால் தத்தளித்துவரும் நிலையில், விளம்பரங்களுக்கு செலவு செய்ய யாரும் வர மாட்டார்கள் என கூறப்பட்டது.

இதனால் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு வருமானம் குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதிக பார்வையாளர்கள் காரணமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஐபிஎல் 2020 தொடரில் சுமார் 2400 கோடி ரூபாய் விளம்பர வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி விளம்பரம் மூலம் 2250 கோடியும், ஹாட் ஸ்டார் விளம்பரங்கள் மூலம் 200 முதல் 250 கோடியும் வருவாய் ஈட்டி இருக்கலாம் என Insidesport செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் பார்வையாளர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்க சதவீதத்தில் அதிகரித்த நிலையில், வருமானம் ஒற்றை இலக்க சதவீதத்தில் தான் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் 85 சதவீத விளம்பரங்கள் ஐபிஎல் தொடருக்கு முன்பே ஒப்பந்தம் செய்யப்பட்டது தான். அந்த வகையில் அந்த தொலைக்காட்சிக்கு இது கொஞ்சம் வருத்தம்தான் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (பார்க்) இந்தியாவின் தரவுகளின்படி, கடந்த ஐந்து வாரங்களில் 21 சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட முதல் 41 போட்டிகளில் 700 கோடி பார்வை நிமிடங்கள். இது 12-வது சீசன் ஐபிஎல் தொடருடன் ஒப்பிடும்போது 28 சதவீதம் அதிகமாகும். அப்போது 24 சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட 44 போட்டிகளில் 550 கோடி பார்வை நிமிடங்கள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்