"சிஸ்கே டீம்க்காக ஆடணும்.. 14 வருஷமா வெயிட் பண்ணும் வீரர்.." இந்த தடவ ஆச்சும் நடக்குமா?.. தோனி முடிவு என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், வரும் 12 மற்றும் 13 ஆகிய தினங்களில், பெங்களூரில் வைத்து நடைபெறவுள்ளது.

Advertising
>
Advertising

புதிதாக சேர்ந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகளுடன், மொத்தம் 10 அணிகள், இந்த முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளது.

அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள், தலா 3 வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், மற்ற 8 அணிகளும் 2 முதல் 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

விறுவிறுப்பு

மீதமுள்ள வீரர்களை, நடைபெறவிருக்கும், ஐபிஎல் மெகா ஏலத்தில் எடுக்கவுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு புதிய அணியை அனைத்து அணியினரும் உருவாக்கவுள்ளதால், நிச்சயம் சில சிறந்த வீரர்களை எடுக்க, அனைத்து அணிகளும் போட்டி போடும். இதனால், ஐபிஎல் ஏலம் நடைபெறும் இரண்டு நாட்களும், விறுவிறுப்புக்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது.

திட்டம் போடும் அணிகள்

அதே போல, ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ள 590 வீரர்கள் பெயரும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. எந்தெந்த வீரர்களை எடுக்க முனைப்பு காட்ட வேண்டும் என்பது பற்றியும், தங்களிடம் இருக்கும் மீதி பணத்தைக் கொண்டு, எப்படிப்பட்ட வீரர்களைத் தேர்வு செய்யலாம் என்பது பற்றியும், அனைத்து அணிகளும் தற்போதே தீவிரமாக திட்டம் போட்டு வருகிறது.

தினேஷ் கார்த்திக்

அது மட்டுமில்லாமல், ஏல பட்டியலிலுள்ள பல வீரர்களும், தங்கள் ஆட வேண்டிய அணி குறித்து, விருப்பம் தெரிவித்தும் வருகின்றனர். அந்த வகையில், இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக்கும், 15 ஆவது ஐபிஎல் தொடரில் எந்த அணிக்கு ஆட விருப்பத்துடன் இருப்பது பற்றி, சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் ஆடணும்

'சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, நான் இந்த முறை ஐபிஎல் தொடரில் ஆடினால், நிச்சயம் நல்லது என நினைக்கிறேன். நான் சென்னையைச் சேர்ந்தவன். ஆனால், அதே வேளையில், எந்த அணிக்காக நான் ஆடினாலும், அதனை மரியாதையாக தான் நான் கருதுவேன். ஏனென்றால், இத்தனை நாட்கள் நான் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருவது, ஐபிஎல் போன்ற ஒரு தொடரில், வாய்ப்பு கிடைத்து சிறப்பாக ஆடுவதற்காக தான்.

பரிசீலனை

ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும், நான் எனது நண்பர் அபிஷேக் நாயருடன் உட்கார்ந்து, போட்டியை பற்றி மறுபரிசீலனை செய்வேன். விஜய் ஹசாரே தொடருக்கு பிறகு, நாங்கள் அதனை பரிசீலனை செய்த போது, இரண்டு இடங்களில் சிறப்பான ஷாட்களை ஆட வேண்டும் என்பதை ஆராய்ந்து தெரிந்து கொண்டோம். இதே போல, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக, அவர்கள் பந்தினை, உங்களிடம் இருந்து வெளியே வீசினால், அதனை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் மிகவும் நுண்ணிப்பாக கவனித்து வருகிறேன்' என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

காத்திருக்கும் தினேஷ் கார்த்திக்

சென்னையைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், தமிழ் நாட்டிற்காக பல உள்ளூர் தொடர்களில் களமிறங்கி அசத்தியுள்ளார். அதே போல, ஐபிஎல் தொடரில், 6 அணிகளுக்காக களமிறங்கியுள்ள தினேஷ் கார்த்திக், ஒரு முறை கூட, தனது ஊர் பெயர் கொண்ட அணியான சிஎஸ்கேவில் இடம்பெற்றது கிடையாது.

சென்னை அணிக்காக ஆட வேண்டும் என்பதை, தன்னுடைய விருப்பமாக, பல முறை தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கான வாய்ப்புகள் இதுவரை அமையவில்லை. 14 ஆண்டுகளாக காத்திருக்கும் தினேஷ் கார்த்திக்கிற்கு இந்த ஐபிஎல் தொடரில், சென்னை அணி நிர்வாகம்  மற்றும் தோனி ஆகியோர், பதில் சொல்வார்களா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

CHENNAI-SUPER-KINGS, MSDHONI, DINESH KARTHIK, IPL AUCTION 2022, சிஎஸ்கே, தினேஷ் கார்த்திக், தோனி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்