3 வருஷத்துக்கு அப்புறம் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்… அறிவிப்பு வந்ததும் போட்ட வைரல் Tweet

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணிக்காக தினேஷ் கார்த்திக் மீண்டும் டி 20 போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

3 வருஷத்துக்கு அப்புறம் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்… அறிவிப்பு வந்ததும் போட்ட வைரல் Tweet
Advertising
>
Advertising

Also Read | "3 வருஷம் ஆச்சு அவரை இப்டி பாத்து.." ஐபிஎல் தொடருக்கு பின் தினேஷ் கார்த்திக்கிற்கு அடித்த ஜாக்பாட்..

இந்திய அணியில் மீண்டும் DK…

ஐபிஎல் 2022 தொடர் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்திய அணி அடுத்து தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளோடு சர்வதேசப் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள 5 டி 20 போட்டி கொண்ட தொடர், ஜூன் மாதம் 9 ஆம் தேதி, இந்தியாவில் வைத்து ஆரம்பமாக உள்ளது. இதற்கான இந்திய அணி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Dinesh karthik viral tweet after selected in Indian team

மூத்த வீரர்களுக்கு ஓய்வு…

இந்த தொடருக்கான அணியில் விராட் கோலி, ரோஹித், பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், துணை கேப்டனாக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல, ருத்துராஜ், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், ரவி பிஷ்னோய் உள்ளிட்ட பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் அசத்தல் ஃபார்ம்…

தினேஷ் கார்த்திக் மீண்டும் அணியில் இடம்பெற தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரில் RCB அணிக்கான அவரது அதிரடி ஆட்டமே முக்கியக் காரணம். இந்த தொடரில் 14 போட்டிகளில் 287 ரன்களை 191 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் சேர்த்துள்ளார். தற்போது அவர் இந்திய டி 20 அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவரின் அதிரடி ஆட்டம் தொடரும் பட்சத்தில் அவர் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடரிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.

தினேஷ் கார்த்திக் Tweet…

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “நீங்கள் உங்களை நம்பினால் நடக்கவேண்டியது அனைத்தும் நடக்கும். உங்கள் ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. கடின உழைப்பு தொடரும்” எனக் கூறியுள்ளார். இந்த டிவீட் இப்போது இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Also Read | "கதவு, ஜன்னல்'ன்னு எல்லாமே பூட்டி கெடந்து இருக்கு.." பதறிய அக்கம் பக்கத்தினர்.. கதவைத் திறந்ததும் வாசலில் கிடந்த கடிதம்...

CRICKET, DINESH KARTHIK, DINESH KARTHIK TWEET, INDIAN TEAM, IPL 2022, RCB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்