‘ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தால்’... ‘மிஸ்ஸான தமிழக வீரர்கள்’... ‘கேப்டனான தினேஷ் கார்த்திக்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஜனவரி மாதத்தில் துவங்க உள்ள சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டியில், தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஏப்ரல் மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றி நடத்தப்பட்டது. இதனால் இந்திய ரசிகர்கள் இந்தியாவில் கிரிக்கெட் போட்டி எப்போது நடைபெறும் என்று ஆவலுடன் காத்திருந்தபோது, 2021 பிப்ரவரி மாதத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
தற்போது இதற்கு முன்னர் சையது முஷ்டாக் அலி டி20 தொடர் வருகின்ற ஜனவரி 10 முதல் 31 வரை பிசிசிஐ நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தொடரில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொள்ளும் என்று கூறப்படுகிறது. இந்த தொடர் 2021 ஐபிஎல் தொடருக்கு முன் நடைபெறுவது, இளம் வீரர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த டி20 தொடருக்காக ஒவ்வொரு அணிகளும் தங்களது வீரர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறது.
இந்தத் தொடரில் இந்திய அணியின் ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்களும் விளையாட இருக்கின்றனர். உத்திரப்பிரதேஷ் அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னாவும், கேரளா அணிக்காக ஸ்ரீசாந்தும், ஆந்திரப்பிரதேச அணிக்காக அம்பத்தி ராயுடு மற்றும் பஞ்சாப் அணி சார்பாக யுவராஜ் சிங்கும் விளையாடுகின்றனர்.
இந்நிலையில் 26 வீரர்களை கொண்ட தமிழ்நாடு அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தமிழ்நாடு அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். விஜய் சங்கர் துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாபா அபரஜித், ஷாருக்கான், சாய் கிஷோர், முருகன் அஷ்வின், சித்தார்த் ஆகியோரும் தமிழ்நாடு அணியில் இடம் பெற்றுள்ளனர்.
முரளி விஜய் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தப் போட்டியில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் விலகியிருந்தார். வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால் அவர் பங்கேற்கவில்லை. மேலும் மூத்த வீரர் அஸ்வின், இளம் வீரர்கள் வாஷிங்கடன் சுந்தர், நடராஜன் மூன்று பேரும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளதால் அவர்களும் கலந்துகொள்ளவில்லை.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “கோலிக்கு ஒரு ரூலு... நடராஜனுக்கு ஒரு ரூலா...??? பாவம்யா, நடராஜன்...!!” - தமிழக வீரருக்காக கோபத்தில் கொந்தளித்த முன்னாள் வீரர்!!! - என்ன நடந்தது, நடராஜனுக்கு??!
- 'நடராஜனும் தான் அப்பா ஆனாரு...' அவர் மேட்ச விட்டுட்டு போனாரா...? 'அவருக்கு ஒரு நியாயம்...' கோலிக்கு ஒரு நியாயமா...? - இந்திய அணியின் முன்னாள் கேப்டன் காட்டம்...!
- 'தம்பி நட்டு... இங்க வாங்க'!.. இந்தியாவுக்கு கிளம்பும் முன்... நடராஜனை அழைத்துப் பேசிய கோலி!.. கடைசியா இருக்குற வாய்ப்பு 'இது' தான்!.. அற்புதம் நிகழுமா?
- ‘அடிக்கடி காயத்தால் அவதிப்படும் சீனியர் வீரர்’... ‘முன்னாள் சர்ச்சை வீரர் சொன்னது போலவே’... ‘டஃப் கொடுக்கும் நடராஜன்’... ‘இதுக்கும் சான்ஸ் இருக்கு’...!!!
- இந்த ‘ஷாக்’-ஐ கொஞ்சம் கூட எதிர்பாக்கல.. அவர் பேட்டிங் பிடிக்க, ‘கோலி’ சந்தோஷத்துல சிரிக்க.. இன்னைக்கு மேட்ச்ல ‘ஹைலைட்டே’ இந்த சம்பவம்தான்..!
- ‘யாருமே இத எதிர்பார்க்கலல’... ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’... ‘பேட்டிங் தூணையே கலங்க வைத்த தமிழக வீரர்’...!!!
- ‘ரன்களே எடுக்காமல்’... ‘அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள்’... ‘ஏமாற்றமடைந்த இந்திய கேப்டன் கோலி’...
- ‘இது கொஞ்சம் கூட நல்லா இல்ல’... ‘அந்த 2 பேரும் ரன்களே எடுக்க மாட்டாங்க’... 'வெளுத்து வாங்கும் ரசிகர்கள்’...!!!
- "'மேட்ச்' முடிஞ்சாலும் இப்டி தூள் கெளப்புறாரே!!..." 'மேஜிக்' செய்த 'நடராஜன்'... ஆடிப் போன 'இந்திய' வீரர்கள்... வேற லெவல் 'சம்பவம்'!!!
- ‘ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்’... ‘அதிரடியாக இடம் பிடித்த இந்திய வீரர்கள்’... ‘ஆனாலும் 3-வது இடத்துக்கு இறங்கிய இந்திய அணி’...!!!