Video: இந்த 3 கேப்டன்களுக்கும்.... ரொம்ப மோசமான ஒரு 'ஒற்றுமை' இருக்கு... என்னன்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் தற்போது லேசாக சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கின்றன. அனைத்து அணிகளும் 1 வெற்றியுடன் இருக்க டெல்லி அணி 2 வெற்றிகளை ருசித்துள்ளது. அதே நேரம் தனிப்பட்ட முறையில் கேப்டன்களின் மோசமான ரெக்கார்டும் ரசிகர்களால் வெளிச்சம் போட்டு காண்பிக்கப்படுகிறது.
நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் மோசமான முறையில் அவுட் ஆனார். அதாவது அவர் ரன் எதுவும் எடுக்காமல் இருக்கும் போது அவுட் ஆனார். எனினும் கேப்டனாக தினேஷ் கார்த்திக் டிஆர்எஸ் கேட்க, டிஆர்எஸ் முறையிலும் அவரது அவுட் உறுதி செய்யப்பட்டது.
மேலும் டிஆர்எஸ் கேட்கப்படுவதற்கான காலம் தாண்டி தினேஷ் டிஆர்எஸ் கேட்க, அதை அம்பயரும் எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டது குறித்தும் ட்விட்டரில் தாளித்தனர்.
அந்த வகையில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பஞ்சாப் அணியின் முன்னாள் கேப்டன் அஸ்வின் ஆகியோருடன் மோசமான சாதனை ஒன்றை தினேஷ் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி டிஆர்எஸ் முறையிலும் அது அவுட் என நிரூபணம் செய்யப்பட்டதே அந்த மோசமான சாதனை ஆகும்.
ரோஹித் 2018-ம் ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியிலும், அஸ்வின் 2018-ம் ஆண்டு சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் , தினேஷ் கார்த்திகே நேற்று (2020) அபுதாபியில் நடைபெற்ற போட்டியிலும் இந்த மோசமான சாதனையை படைத்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அடுத்த மேட்சுல கொஞ்சம்... இத பண்ணிட்டு வெளையாட வாங்க"... 'வம்புக்கிழுத்த சேவாக்'... 'கொந்தளிப்பில் சிஎஸ்கே ரசிகர்கள்!!!'...
- 'மீண்டும் அணிக்கு திரும்புகிறாரா ரெய்னா!!!?'... 'தொடர் தோல்வியால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்'... 'சிஎஸ்கே CEO பதில்!'...
- 'அவரு எப்போதான் ரீ-என்ட்ரீ குடுப்பாரு?'... 'முக்கிய வீரர் குறித்து வெளியான அப்டேட்'... 'கன்ஃபார்ம் செய்த கேப்டன்!!!'...
- ‘இரட்டை அர்த்த ஐபிஎல் கமெண்ட்ரி சர்ச்சை!’.. விட்டு விளாசிய அனுஷ்கா ஷர்மா.. ‘அந்த அர்த்தத்துலயா நான் சொன்னேன்?’.. கவாஸ்கர் விளக்கம்!
- Video: 'ஈ சாலா கப் நமதே'... பெங்களூர் அணியை கிண்டல் செய்த இளம் 'கேப்டன்'... வைரலாகும் வீடியோ!
- 'கேப்டன் மார்வெல' கூப்பிடுங்க விளாசும் ரசிகர்கள்... அவரு மறுபடியும் உள்ள வருவாரா?
- Video: தோத்தத நெனச்சு 'ரொம்ப' கஷ்டமா தான் இருக்கு... ஆனாலும் அந்த விஷயம் 'நம்பவே' முடியல!
- அவரு டீமுக்கு வரவேண்டிய 'நேரம்' வந்துருச்சு... வெளிப்படையாக பேசிய தோனி... எப்போ வரப்போறாரு?
- இதுதான் 'பேர்வெல்' மேட்ச்... அதான் அடிக்கடி 'அவர' கேமரால காட்டுறாங்க... விளாசும் ரசிகர்கள்!
- நியாயமா 'டக்-அவுட்' ஆகிருக்கணும்... கேட்ச் புடிச்சும் ஏன் 'அவுட்' கேட்காம விட்டுட்டாரு?.... ரசிகர்கள் அதிர்ச்சி!