"அடிக்கட்டும் அவன்".. அஸ்வின் கிட்ட தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக்.. "கோலியிடமும் ஒன்னு சொன்னாரு பாருங்க".. வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி 20 உலக கோப்பைத் தொடருக்கான பயிற்சி போட்டியில் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசுவது தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "தீபாவளி ஸ்பெஷலா".. ஊழியர்களுக்கு இப்டி ஒரு பரிசா??.. வியந்து பார்க்க வைத்த சென்னை தொழிலதிபர்!!

ஆஸ்திரேலியாவில் வைத்து தற்போது டி 20 உலக கோப்பைத் தொடர் ஆரம்பமாகி உள்ளது.

இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாகவும் தயாராகி வருகின்றனர். ஒரு பக்கம், தகுதி சுற்று ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் பயிற்சி போட்டியிலும் விளையாடி வருகின்றன.

இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதி இருந்தன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல் 33 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் எடுத்திருந்தார். அதே போல, மிடில் ஆர்டரில் அதிரடி காட்டிய சூர்யகுமார், 50 ரன்கள் எடுத்திருந்தார்.

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. இதனால், பயிற்சி ஆட்டம் என்ற போதிலும் விறுவிறுப்பு உருவானது. இதனிடையே கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ஷமி வீச, கடைசி 4 பந்துகளிலும் விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலிய அணி. இதனால், 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

இதனிடையே, இந்த போட்டிக்கு மத்தியில் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசி இருந்தது கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பொதுவாக, கீப்பிங் நிற்கும் வீரர்கள் பந்து வீச்சாளருடன் பேசிக் கொண்டே இருப்பது இயல்பான ஒன்று தான். அதிலும், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு புரியாத வகையில் பவுலருக்கு ஆலோசனை வழங்குவதையும் சிலர் கடைபிடிப்பார்கள். அப்படி தான், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தெரியாத தமிழ் மொழியில் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் உரையாடுகிறார் தினேஷ் கார்த்திக். இவர்கள் இருவரும் தமிழக வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்போது பேசும் தினேஷ் கார்த்திக், "வேணாம் Ash, இவனுக்கு நீ சாதாரணமாவே போடு. முதல் மூணு பால் பார். அடிக்கட்டும் இவன்" என ஸ்மித் பேட்டிங் செய்து கொண்டு நிற்கும் போது கூறுகிறார். தொடர்ந்து, ஸ்மித் அடித்த பந்து கோலி கைக்கு செல்லவே, "வா வா வா விராட்" என்றும் தமிழில் சொல்கிறார் தினேஷ் கார்த்திக். தினேஷ் கார்த்திக் தமிழை கேட்ட வர்ணனையாளர்கள், தோனி கீப்பிங் செய்யும் போது ஹிந்தியில் பேசுவது புரியும் என்றும், ஆனால் தமிழ் புரியவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.

தினேஷ் கார்த்திக் தமிழில் பேசும் வீடியோக்கள் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி வருகிறது.

 

Also Read | ஜப்பானில் தொடங்கிய Loves.. கிருஷ்ணகிரில வெச்சு கல்யாணம்.. தைவான் பெண்ணை கரம்பிடித்த தமிழன்!! சுவாரஸ்யம்!!

CRICKET, DINESH KARTHIK, ASHWIN, VIRAT KOHLI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்