“நான் நெறைய டீம்ல விளையாடி இருக்கேன், ஆனா...!” RCB ரசிகர்கள் பற்றி உருக்கமாக DK சொன்ன வார்த்தை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர்களுக்கு தினேஷ் கார்த்திக் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது சீசன் ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டி இன்று (29.05.2022) அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன.

முன்னதாக நடந்த ப்ளே ஆப் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நடப்பு ஐபிஎல் சீசனில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெங்களூரு அணி, இந்த முறை கோப்பையை கைப்பற்றும் என பலரும் கணித்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில் தமிழக வீரரும், பெங்களூரு அணியின் சார்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார் அதில், ‘நான் பல அணிகளில் விளையாடியுள்ளேன். ஆனால் நான் பார்த்த சிறந்த ரசிகர் பட்டாளம் இதுதான். ஏனென்றால் மைதானத்தில் நான் பெற்ற மகிழ்ச்சியை வேறு எங்கும் நான் பெற்றதில்லை. உங்களைப் போன்ற ரசிகர்களுக்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர், என எல்லா இடங்களிலும் ரசிகர்கள் நேர்மறையான எண்ணங்களை விதைக்கின்றனர். அடுத்த சீசனில் கோப்பையை வெல்ல நாங்கள் கடுமையாக முயற்சிப்போம்’ என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சார்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக்கை ரூ 5.50 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியது. நடப்பு சீசனில் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை தினேஷ் கார்த்திக் வெளிப்படுத்தினார். ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற தினேஷ் கார்த்திக் முக்கிய காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்