"தப்பான ஆள் கிட்ட பேசிட்டு இருக்கீங்க ப்ரோ"...தினேஷ் கார்த்திக்கிடம் கோலி சொன்ன விஷயம்.. என்ன ஆச்சு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விராட் கோலியிடம் பெங்களூரு அணிக்காக விளையாடுவது குறித்து ஏற்கனவே பேசியதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்து உள்ளார்.

Advertising
>
Advertising

உக்ரைன் மேயரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்டு ரஷ்யா வச்ச டிமாண்ட்..முழு விபரம்..!

ஐபிஎல்

ஐபிஎல் தொடர் உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது . 2022ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான மெகா ஏலம் கடந்த பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதன்மூலம் கொல்கத்தா அணியில் இருந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு வந்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

முன்னதாக விராட் கோலி தலைமையில் விளையாடி வந்த பெங்களூரு அணி, ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததன் காரணமாக, கேப்டன் பொறுப்பை துறப்பதாக கோலி அறிவித்தார். இதனால் பெங்களூரு அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு கடந்த 12 ஆம் தேதி அந்த அணி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்தது.

தென்னாப்பிரிக்க வீரரான டூ பிளேஸிஸ் -ஐ கேப்டனாக நியமித்திருக்கிறது பெங்களூரு அணி நிர்வாகம். ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி ஆகிய அணிகளில் விளையாடி உள்ள டூ பிளேஸிஸ் இந்த முறை பெங்களூரு அணியை வழிநடத்த இருக்கிறார்

தினேஷ் கார்த்திக்

பெங்களூரு அணியின் கேப்டன் தேர்வில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆஸ்திரேலிய வீரரான கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரது பெயர்களும் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், டூ பிளேஸிஸ் தலைமையில் விளையாடுவது குறித்து பேசி உள்ள தினேஷ் கார்த்திக், கடந்த இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரின்போதே பெங்களூரு அணிக்காக விளையாடுவது குறித்து விராட் கோலியிடம் பேசியதாக தெரிவித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் இதுபற்றி பேசுகையில்,"இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஆர்சிபி அணிக்காக விளையாடுவது குறித்து விராட் கோலியிடம் பேசினேன். அதற்கு அவர், 'நீங்கள் தவறான நபரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள், ப்ரோ' எனத் தெரிவித்தார்" என்றார்.

மேலும், கோலி மிகச்சிறந்த கேப்டன் எனவும் தினேஷ் கார்த்திக் புகழாரம் சூட்டினார். கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக்கை 5 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

கோலி, டூ பிளேஸிஸ், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் என பெங்களூரு அணி தரமான ஹிட்டர்களோடு இந்த ஆண்டு களமிறங்க இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

"உங்க வீட்டுக்கு வந்தா சாப்பாடு போடுவீங்களா?".. வீடியோ காலில் CM கேட்ட கேள்வி.. நெகிழ்ச்சியில் நரிக்குறவ மக்கள் சொன்ன பதில்..!

CRICKET, RCB, DINESH KARTHIK, KOHLI, VIRAT KOHLI, CRICKET PLAYER DINESH KARTHIK, தினேஷ் கார்த்திக், விராட் கோலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்