'செம காண்டான தினேஷ் கார்த்திக்' ...அதிர்ந்த வீரர்கள்... ஏன் அப்படி திட்டினாரு?...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணி வீரர்களிடம் அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கோபமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் 52 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி தொடக்கத்தில் சறுக்கிய போதும்,பின்னர் நிதானித்து ஆடி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்களை குவித்தது.பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி,18 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா வீரர் சுப்மான் கில் 49 பந்தில் 65 ரன்னுடனும் தினேஷ் கார்த்திக் 9 பந்தில் ஒரு சிக்சர் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனிடையே கொல்கத்தா அணி பந்துவீசிய போது,கேப்டன் தினேஷ் கார்த்திக் அந்த அணி வீரர்களிடம் கோபமாக பேசியது சமூகவலைத்தளங்களில் வைரலானது.

சுனில் நரேன் மற்றும் உத்தப்பாவிடம் கடுமையாக நடந்துகொண்ட தினேஷ் கார்த்திக்யிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பது.அதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக் ''நான் வீரர்களிடம் கடுமையாக நடந்து கொண்டது உண்மை தான். பந்துவீச்சாளர்களும், ஃபீல்டர்களும் நடந்து கொண்ட முறை சரியில்லை.அதனால் அவர்களிடம் நானா சற்று கடுமையாக நடந்து கொண்டேன்.

வீரர்களிடம் இருந்து நல்ல உழைப்பும் முடிவும் கிடைக்க கோபம் அவசியம் என்றால் அதை செய்வதில் தவறில்லை.ஆனால் நான் கோபப்படுவது மிகவும் அரிதான ஒன்று என தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்