Level 1 விதிமீறலில் ஈடுபட்ட பிரபல வீரர் ? … இன்னைக்கு ரெண்டாவது Qualifier … கண்டித்த பிசிசிஐ.. பரபரப்பு தகவல்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தினேஷ் கார்த்திக் லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஐபிஎல் விதிகளை மீறியதாக கண்டிக்கப்பட்டுள்ளார்.

Advertising
>
Advertising

தினேஷ் கார்த்திக்….

ஐபிஎல் 2022 தொடர் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்திய அணி அடுத்து தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளோடு சர்வதேசப் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள 5 டி 20 போட்டி கொண்ட தொடர், ஜூன் மாதம் 9 ஆம் தேதி, இந்தியாவில் வைத்து ஆரம்பமாக உள்ளது. இதற்கான இந்திய அணி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


தினேஷ் கார்த்திக் மீண்டும் அணியில் இடம்பெற தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரில் RCB அணிக்கான அவரது அதிரடி ஆட்டமே முக்கியக் காரணம். இந்த தொடரில் 15 போட்டிகளில் 310 ரன்களுக்கு மேல் கிட்டத்தட்ட 190 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் சேர்த்துள்ளார்.

விதிமீறல் சர்ச்சை….

இந்நிலையில் சமீபத்தில் லக்னோ சுப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் அவர் விளையாடிய போது நடத்தை விதிகளை மீறியதாக பிசிசிஐ-ஆல் கண்டிக்கப்பட்டுள்ளார். இது சம்மந்தமாக வெளியான தகவலில் “கொல்கத்தாவில் நடந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியின் போது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கீப்பர்-பேட்டர் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக கண்டிக்கப்பட்டுள்ளதாக” சொல்லப்படுகிறது.

என்ன விதிமீறல்…

மேலும் ’ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.3 இன் கீழ் லெவல் 1 விதிமீறலில் ஈடுபட்டதை தினேஷ் கார்த்திக் ஒப்புக்கொண்டதாகவும்’ சொல்லப்படுகிறது. லெவல் 1 விதி மீறல்களுக்கு, மேட்ச் ரெஃப்ரியின் முடிவே இறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தினேஷ் கார்த்திக் என்ன விதிமீறலில் ஈடுபட்டார் என சொல்லப்படவில்லை. இன்று இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் RCB அணி விளையாட உள்ள நிலையில் இந்த தகவல் அந்த அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று RCB அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை குவாலிஃபயரில் போட்டியில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியோடு இறுதிப் போட்டியில் மோத உள்ளது.

DINESHKARTHIK, IPL 2022, RCB, DINESH KARTHIK, BCCI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்